நண்பர்களுடன் தனி தீவுக்கு சுற்றுலா சென்ற நடிகை த்ரிஷா…! என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க…!

நடிகை த்ரிஷா தனது நண்பர்களுடன் சுடன் தீவுக்கு சுற்றுலா சென்ற காணொளிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் என்றும் இளமையாக காணப்படும் நடிகை என நடிகை த்ரிஷா கொண்டாடப்பட்டு வருகின்றார்.80களில் நடிகை நதியா எப்படியோ அவருக்கு பின்னர் எவ்வளவு வயது ஆனாலும் இவர் எப்படி இளமையாகவே உள்ளார் என ரசிகர்கள் பார்த்து வியந்து போவது நடிகை த்ரிஷாவை தான்.இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1,

பொன்னியின் செல்வன் 2, லியோ ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.இதையடுத்து, நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இப்பட ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்து வருகிறது. இப்படத்தின் ஃபஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது. இறுதியாக விஜயின் தி கோட் படத்தில் “மட்ட” பாடலுக்காக அவர் நடனமாடியிருப்பது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன்

ஒரு சாராரை குஷியில் ஆழ்த்தியது. சில நிமிட பாடலில், 1 நிமிடம் கூட வராத த்ரிஷா அதற்கு ரூ.50 முதல் 80 லட்சம் வரை சம்பளமாக வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் தனது நண்பர்களுடன் நடிகை இவர் சுடன் தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். குறித்த காணொளிகள் தற்போது இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *