சின்னத்திரையில் தொகுப்பாளினியாக ஆரம்பித்துமலையாள சினிமாவில் ஒரே ஒரு படம் நடித்தால் போதும் என்று நடிப்பிற்கு வந்தவர் தான் நடிகை நயன் தாரா. முதல் படமே மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஐய்யா, சந்திரமுகி போன்ற முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து டாப் நடிகையாகவும் கலமிறங்கி தன்னுடைய திறமையால் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் வரிசைக்கட்டி நயன் கால்ஷீட்டிற்காக காத்தும் இருக்கிறார்கள். இந்நிலையில், 2005ல் தொட்டி ஜெயா படம் சிம்பு, கோபிகா நடிப்பில் இயக்குனர் துரை இயக்கத்தில் வெளியானது.இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஆடிஷன் நடந்த போது நடிகை நயன் தாராவும் கலந்து கொண்டிருக்கிறார்.
ஆனால் இயக்குனர் நயன் தாராவை ரிஜக்ட் செய்து அனுப்பி வைத்திருக்கிறார். இதுகுறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தானு கேட்டதற்கு அவருக்கு நடிப்பு வரவில்லை என்று சொல்லி ரிஜெக்ட் செய்ததாக கூறியிருக்கிறார். அதற்கு தானு இவர் நடிப்பில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து ஐய்யா படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தார், மேலும் ரஜினிகாந்த் படத்திலும் கமிட்டாகி இருக்கிறார்.
நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்திற்கு நயன் தாரா வருவார் என்று கூறியிருக்கிறார். நயனுக்கு பதில் நடிகை கோபிகா நடித்து ஹிட்டும் ஆகியிருக்கிறது. அதன்பின் நயன் தாரா, சந்திரமுகி போன்ற படங்கள் மூலம் நடித்து தன் நடிப்பு திறமையை காட்டி இந்த இடத்திற்கு வந்துள்ளார். அதன்பின் தான் நயன் சிம்புவுடன் வல்லவன், இது நம்ம ஆளு போன்ற படங்களில் ஜோடியாக நடித்து அவருடன் காதலிலும் இருந்திருக்கிறார்.