நடிகை ரச்சிதாவுடன் அமுல் பேபி விஷ்ணு நெருக்கம்…! காரணம் இதுதானா…? ரசிகர்கள் பெரும் ஷாக்…!

நடிகர் விஷ்ணு சீரியல் நடிகை ரச்சிதாவுடன் நெருக்கமானதன் காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அமுல் பேபி விஷ்ணு விஜய் டிவியில் பிரபல சேரியலான ஆபீஸ் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் விஷ்ணு. இவர் அதில் பல ரசிகர்களை கவர்ந்து வந்தார், பின்னர் ஜீ தமிழில் சத்யா என்ற சீரியலில் நடிகை ஆயிஷாவுடன் இனைந்து நடித்தார். இதில் அமுல் பேபி என்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அந்த சீரியல் நடித்த பொழுது ஆயிஷாவை காதலித்து வந்ததாக கிசுகிசு எழுந்தது.

அதன்பின்னர், ஒரு பிலே பாயாக இருந்து வந்த இவர் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7-ல் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகையுடன் நெருக்கம் இந்நிலையில், நடிகர் விஷ்ணு பிக் பாஸ் சீசன் 7ல் கலந்துகொள்வதற்கு சிபாரிசுக்காக கடந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ரச்சிதாவுடன் சமீபகாலமாக நெருக்கம் காட்டி வருகிறார் என்று கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் தீவிர ரசிகரான விஷ்ணு முதல் சீசனில் இருந்து எப்படியாவது

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து விட வேண்டும் என பலமுறை முயற்சி செய்து வந்தார்.அப்பொழுது விட்டுப்போன வாய்ப்பு தற்பொழுது கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை ரச்சிதாவின் கணவர் தினேஷ் மற்றும் விஷ்ணு இருவரும் ஒரே சமயத்தில் உள்ளே நுழைந்தால் சூடுபிடிக்கும் என்ற காரணத்தால் இவரை தேர்வு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *