தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர் நடிகை நமீதா. அறிமுகமான முதல் பல இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தார். தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகை நமிதா. இவர் அனைவரையும் மச்சான் என்று தான் செல்லமாக அழைப்பார்.அதனால் தான் இவர் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம்.
எங்கள் அண்ணா படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் விஜய்,அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த நமிதாவிற்கு பின் சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். 2017 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி தனது காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை நடிகை நமீதா திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நமீதா குழந்தைகளின் தனது குழந்தைகளின் முதல் பிறந்தநாளை கேரளாவில் உள்ள கோவில் ஒன்றில் கொண்டாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ற்போது எங்களது குழந்தைகள் ஒரு வயதை பூர்த்தி செய்வதாகவும், தனது இதயம் மற்றும் இதயத் துடிப்புக்கு காரணமான கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் ஐ லவ் யூ கூறியுள்ளார்.