நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்துக் கொண்ட கல்லூரி அரங்கத்தை அந்தக் கல்லூரி மாணவர்கள் சில கோமியம் ஊற்றி கழுவிய வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழ் சினிமாவில் குணசித்திர நடிகன், காமடியன், வில்லன் என பல கதாப்பாத்திரங்களை ஏற்று நடிப்பவர் தான் நடிகர் பிரகாஷ்ராஜ்.இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
நடிப்பைத் தவிர அவ்வப்போது சமூகப்பணியிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும், அரசியல் கருத்துக்களை பேசி அனைவரையும் ஈர்த்து வைத்திருக்கிறார். கோமியம் ஊற்றி கழுவிய மாணவர்கள் இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் சிவமோகா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்தக் கருத்தரங்கிற்கு நடிகர் பிரகாஷ்ராஜும் கலந்துக் கொண்டிருந்தார். தனியார் அமைப்புகளுக்கு கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்த நிர்வாகத்தைக் கண்டித்து பாஜகவினரும், பாஜக மாணவ அமைப்பினரும் கல்லூரி முன் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.
Protesters, including students, objected to #PrakashRaj‘s visit for a private event at Sir M Visvesvaraya College of Arts and Commerce in Bhadravathi in Shivamogga, #Karnataka. Following his visit, they allegedly “purified” the campus with #GauMutra. pic.twitter.com/iJeaB0HggM
— Anurag (@LekhakAnurag) August 9, 2023