மதுரையில் கோயில் திருவிழாவிற்கு கூடிய கூட்டம், நடிகர் விஜய் சேதுபதி வருகையை அறிந்து நடிகர் சூரியின் வீட்டின் அருகே கூடியதால் பரபரப்பானது. நடிகர் சூரி பிறந்த ராஜாக்கூர் கிராமத்தில் காளியம்மன் கோயிலில் ஆடி மாத திருவிழா நடைபெற்றது.திருவிழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மூர்த்தி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துவிட்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.மேலும் அவர் திருவிழாவில் கலந்து கொண்டு விழாவை நடத்தினார். மேலும் அந்த கோயில் திருவிழாவை முன்னிட்டு பிரபல திரைப்படம் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டார்.
பின்னர் அவர் நடிகர் சூரியின் வீட்டிற்கு சென்றார். அவரைக் கண்ட ரசிகர்கள் அங்கு ஒன்று திரண்டு அவருக்கு கை குலுக்கி முத்தமிட்டனர்.நடிகர் சூரி வீட்டின் முன்பு அதிக அளவு கூட்டம் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த திருவிழாவை முன்னிட்டு விஜய் டிவி புகழ், தமிழக வணிக வரித்துறை மற்றும் பத்திர துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார். அவர் திருவிழாவில் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் நடிகர் சூரிய உடன் சேர்ந்து அமர்ந்து உணவருந்தினார்.
மேலும் அந்தக் கோயில் திருவிழாவில் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. பின்னர் திருவிழாவை ஒட்டி நடிகர் விஜய் சேதுபதி ராஜாக்கூர் கிராமத்திற்கு சென்று, கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் நடிகர் சூரி வீட்டிற்கு சென்றார்.தங்கள் கிராமத்திற்கு விஜய் சேதுபதி வருவதை அறிந்த கிராம மக்கள், சூரி வீட்டின் முன் குவிந்தனர். விஜய் சேதுபதி வந்ததும் உற்சாக கோஷமிட்டு அவருடன் கைகுலக்கி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.விஜய் சேதுபதியை காண சூரி வீட்டின் முன்பு அதிக அளவு கூட்டம் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மனிதம் போற்றும் எங்கள் மாமனிதனே ❤️😘 #VijaySethupathi Endrum Rasiganin kadhalane 🤩 #Rasiganairasikkumthalaivane @VijaySethuOffl #Makkalselvan #VijaysethupathiChennaiFC @kumaran_VSP@Deva_VSP @DineshSethuOffl pic.twitter.com/a5SSksuxoe
— 🔰சேது ரவி🔰 B+🔴 (@RaviSethuOffl) July 27, 2023