காதல் கோட்டை, சூரியவம்சம் போன்ற பல ஹிட் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை தேவயானி. இவர் தமிழ் சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்த நேரத்தில் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்தார். இவர்களின் திருமணத்திற்கு தேவயானி குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் ராஜகுமாரன் தேவயானி ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் இந்த திருமணம் பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது. தற்பொழுது காமெடி நடிகர் சிங்கமுத்துவிற்கும் தேவயானிக்கும் இருக்கும் உறவை குறித்து தனியார் youtube சேனலுக்கு செய்யாறு பாலு தெரிவித்துள்ள தகவல்கள் கேட்போரை அப்படியா..!! என்று வியக்க வைத்துள்ளது.
திரை உலக பிரபலங்கள் பலர் தங்களுக்குள் ஒரே படங்களில் நடிக்காமல் இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில் தங்களுக்குள் ஒரு இணைப்பில் தான் இருந்துள்ளனர். பல youtube சேனல்கள் வந்ததிலிருந்து திரைப்பட பிரபலங்கள் பலருடைய பின்னணிகள் அதிகமாக வெளிவந்து கொண்டு இருக்கிறது.அப்படிதான் பிரபு, சத்யராஜ் இணைந்து நடித்த ‘சிவசக்தி’ படத்தில் குட்டை பாவாடையுடன் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டத்துடன் தனது சினிமா வாழ்க்கையை துவங்கிய தேவயானி ,”தொட்டா சிணுங்கி’ படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகையாக நிரூபித்தார்.
அதன்மூலம் தனது கேரியரை காதல் கோட்டை ,சூரியவம்சம் போன்ற படம் மூலம் ஜொலிக்க வைத்தார். செம பீக்கில் இருந்த தேவயானி அந்த நேரத்தில் அனைவரையும் அதிருச்சிக்குள்ளாக்கும் வகையில் செய்தது அவரது திருமணம் தான்.தற்பொழுது இணைய வாசிகளுக்கு பிரபல தயாரிப்பாளர் ரவிந்திரன்- மகாலட்சுமி திருமணம் எப்படி அதிர்ச்சியை கிளப்பியதோ..!! அதைவிட 80sகளில் பல மடங்கு வியப்பை கொடுத்தது நடிகை தேவயானி- இயக்குனர் ராஜகுமாரன் திருமணம் தான்.
காதலுக்கு கண் இல்லை என்று பல மொழியை பலர் ஏற்றுக்கொண்ட தருணம் அது என்றே சொல்லலாம். சூரியவம்சம் படத்தில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய ராஜகுமாரன் நடவடிக்கைகள் பிடித்துப் போய் அவரை காதல் செய்ய ஆரம்பித்த தேவயானி, வீட்டின் கடும் எதிர்ப்பையும் மீறி கிட்டத்தட்ட சினிமா பாணியிலே அவரை திருமணமும் செய்து கொண்டார்.நடிகை தேவயானி அம்மாவின் கடும் எதிர்ப்பையும், படை பலத்தையும் மீறி சுவர் ஏரி குதிக்கும் சம்பவங்கள் எல்லாம் நடந்து திருத்தணியில் வைத்து நடைபெற்ற
திருமணம் இயக்குனர் ராஜகுமாரன் நடிகை தேவயானி தம்பதிகள் திருமணம். அப்பொழுது சாட்சி கையெழுத்து போட்டது காமெடி நடிகர் சிங்கமுத்து தானாம். சொல்லப்போனால் இயக்குனர் ராஜகுமாரனை இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக சேர்த்து விட்டதே சிங்கமுத்து தானாம்.இதை தற்பொழுது கேள்விப்பட்ட நெட்டிசன்கள் வெளியே இருந்து பார்ப்பதற்கு சினிமா பிரபலங்கள் தங்களுக்குள்
பெரிய அளவில் தொடர்பு இல்லாதது போல் தெரிந்தாலும் குடும்பம் போல் ஏதாவது ஒரு விதத்தில் தங்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு விதத்தில் ஒருவருக்கொருவர் உதவியாகவோ உறவாகவோ இருந்துள்ளார்கள் என்று சிலாகித்து வருகின்றனர். இந்த தம்பதிகளின் திருமணத்திற்கு சிங்கமுத்து தான் சாட்சி கையெழுத்து போட்டாராம். அதுமட்டுமின்றி ராஜகுமாரனை இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக சேர்த்துவிட்டது சிங்கமுத்து தானாம்.