தமிழ் சினிமாவின் நட்சத்திர குடும்பங்களில் ஒன்று சிவகுமார் குடும்பம். சூர்யா ,கார்த்தி , ஜோதிகா , பிருந்தா என அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் சினிமாத்துறையில் இருப்பவர்கள். இதில் நடிகர் கார்த்தி முதன் முதலில் ‘பருத்திவீரன்’ எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் ப்ரியாமணி கதாநாயகியாக நடித்திருந்தார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. இப்படத்தில் இவரின் நடிப்பிற்காகவும், பிரியாமணி நடிப்பிற்காகவும் தேசிய விருது கிடைத்தது.
தொடர்ந்து பையா, தீரன் அதிகாரம் ஒன்று , கைதி , மெட்ராஸ்,பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் கார்த்தியின் திரைப்பயணத்தை அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் முதல் மற்றும் இரண்டாம் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கடந்த 2011 ஆம் ஆண்டு பெற்றோர் பார்த்து வைத்த பெண் ரஞ்சனி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2013ம் ஆண்டு உமையாள் என்ற பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில், அண்ணனை போல் இவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுற்றுலா சென்றுவிடுவார். சூர்யா ட்ரிப் பிடிக்கும் என்றால் கார்த்திக்கு கிராமத்து வாழ்க்கை என்றால் அவ்வளவு பிரியம். இதனால் நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஏதாவது கிராமத்திற்கு சென்று விடுவாராம். அந்த வகையில், ஊர் திருவிழாவில் மனைவி, மகளுடன் முளைப்பாரி எடுத்து வேண்டுதல் செய்ய சென்ற போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றது. இந்த புகைப்படங்களில் கார்த்தியின் மகளை பார்க்கும் போது வியப்பாக இருக்கின்றது.