தமிழ் சினிமாவில் 90களில் சோக்லேட் பாய் என்னும் அழைக்கப்பட்டு வந்த நடிகர் தான் அரவிந்த் சாமி. இவர் ரஜினி, மம்முட்டி நடிப்பில் வெளியான தளபதி படத்தில் அர்ஜுன் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமானார். பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் சில காலம் சினிமாவை விட்டு விலகியிலுந்த இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் படத்தில் நெக்கட்டிவ் ரோலில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைத்தன்யா நடித்த கஸ்டடி படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.காயத்ரி என்பவரை முதல் திருமணம் செய்துகொண்ட அரவிந்த் சாதி 16 வருடத்திற்கு பிறகு விவாகரத்து பெற்றார்.
அதன்பின் அபர்ணா முகர்ஜி என்பவரை மறுமணம் செய்துகொண்டார்.இந்த நிலையில் இவர் பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒரு படத்திற்கு ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கும் அரவிந்த் சாமிக்கு ரூ. 160 கோடி வரை சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.இவருக்கு சென்னையில் ஒரு அடுக்குமாடி வீடு உள்ளது. அதை தவிர முக்கியமான நகரங்களில் கோடிக்கணக்கில் நிலங்களை வாங்கி போட்டிருக்கிறாராம்.
சினிமா மட்டுமல்ல பிசினஸிலும் அரவிந்த்சாமி அதிக ஈடுபாடு கொண்டவர். இவர் சினிமா, பிசினஸ் என வருடத்திற்கு மட்டும் கோடிக்கணக்கில் சம்பாதித்து செல்வ செழிப்புடன் வாழ்ந்து வருகிறார். இன்று அரவிந்த்சாமி தன்னுடைய 53வது பிறந்த நாளை கொண்டாடுவதால் அவருடைய ரசிகர்கள் மட்டுமல்ல பிரபலங்களும் சோசியல் மீடியாவில் வாழ்த்துக்களை குவித்து கொண்டிருக்கின்றனர். அதே சமயம் அரவிந்த்சாமிக்கு ஒட்டுமொத்தமாக 160 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதும் வைரலாக பேசப்படுகிறது.