பிரபல நடிகை அவரது படங்கள் குறித்தும், நடிகர் அஜித் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். நடிகை சன் டிவியில் தற்போது ட்ரெண்டாக ஓடி கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல். இதில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர் நடிகைகளுக்கும் தனித்தனியே ரசிகர் கூட்டம் பெருகி வருகிறது. அதில் முக்கியமாக குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பவருக்கு அவரது பேச்சு மற்றும் நடவடிக்கையால் ரசிகர்கள் பலரை ஈர்த்துள்ளார்.இந்த சீரியலில் குணசேகரனுக்கு மனைவியாக நடித்துக் கொண்டு இருப்பவர்தான் நடிகை கனிகா. இவர் பிரசன்னா உடன் 5 ஸ்டார் மற்றும் அஜித்துடன் வரலாறு போன்ற ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
அதிலும் அஜித்தின் வரலாறு திரைப்படத்தில் அவருக்கு காதலியாகவும் அம்மாவாகவும் இரண்டு கேரக்டரிலும் நடித்திருந்தார். பேட்டி இந்நிலையில், அவர் ஒரு பேட்டியில் அவருக்கு பட வாய்ப்பு குறைந்தது குறித்து பேசியுள்ளார். அதில் இவர் சினிமாவில் தொடராமல் போனதற்கு காரணம் அஜித்துடன் வரலாறு என்ற படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தது தான் என்று கூறினார்.இதற்கு பிறகு அம்மா கதாபாத்திரங்கள் மட்டுமே வரிசையாக வந்ததாம்.
அதுவும் தன்னைவிட இரண்டு மடங்கு அதிக வயதுடைய நடிகர்களுக்கு அம்மாவாக நடிப்பது அபத்தமாக இருந்தாக கூறினார். அந்த படத்திற்கு பிறகு விஜய், விஜயகாந்த், அர்ஜுன், சரத்குமார் உள்ளிட்டோரின் படங்களில் அவர்களுக்கு அம்மாவாக நடிப்பதற்காக அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. ஆனால் அப்பொழுது சிறு வயதுதான், அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டு, பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தியதாக கூறியுள்ளார்.