சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. ஒரு நடிகராக திரையில் மாஸ் காட்டுவதற்கு முன்பே, எஸ்.ஜே.சூர்யா ஒரு இயக்குநராக சினிமாவில் தன் முத்திரையை பதித்தார். முதல் படமே ‘தல’ அஜித்தை வைத்து இயக்கி ஹிட் கொடுத்தார். அது தான் ‘வாலி’. ‘வாலி’-க்கு பிறகு ‘குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை’ என தொடர்ந்து படங்கள் இயக்கினார். இதில் ‘நியூ, இசை, அன்பே ஆருயிரே’வில் ஒரு ஹீரோவாகவும் வலம் வந்து கெத்து காட்டினார் எஸ்.ஜே.சூர்யா. இப்படங்கள் மட்டுமின்றி மற்ற இயக்குநர்கள் இயக்கிய ‘கள்வனின் காதலி, திருமகன், வியாபாரி, நியூட்டனின் மூன்றாம் விதி, இறைவி, ஸ்பைடர், மெர்சல், மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை, மாநாடு’ என தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது.
இப்போது இவர் நடிப்பில் ‘பொம்மை, உயர்ந்த மனிதன், டான், கடமையை செய், இறவாக்காலம்’, விஷாலின் புதிய படம் என ஐந்து படங்களும், இயக்குநர் ஆண்ட்ரு லூயிஸ் இயக்கும் வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யாவின் சொத்து மதிப்பு ரூ.9 கோடி என தகவல் கிடைத்துள்ளது. எஸ்.ஜே.சூர்யா தமிழ் சினிமாவில் இப்போது தரமான நடிகராக வலம் வருகிறார். அஜித்தின் வாலி திரைப்படத்தின் மூலம் கேரியரில் பெரிய ரீச் பெற்ற இவர் தொடர்ந்து நிறைய படங்கள் இயக்கி வெற்றி இயக்குனரானார். தான் முதல் படத்திற்கு வாங்கி அட்வான்ஸ் தொகையில் தனது உதவி இயக்குனர்களுக்கு பைக் வாங்கிக் கொடுத்து அசத்தியவர்.
சமீப காலங்களில் எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்த படங்கள் சரியான வரவேற்பு பெறவில்லை என்றாலும் நண்பன், இசை, இறைவி, ஸ்பைடர் போன்ற படங்களில் நடித்து மிரட்டியிருக்கிறார். இயக்குனராக இருந்தபோது வாங்கியதை விட இப்போது நடிகராக எஸ்.ஜே.சூர்யா அதிக சம்பளம் பெற்று வருகிறாராம். ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தில் நடிப்பதற்காக எஸ்.ஜே.சூர்யா ரூ. 7 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளாராம். தற்போது எஸ்.ஜே.சூர்யாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ. 150 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.