பழம்பெரும் நடிகரான ரவிச்சந்திரனின் பேத்தி என்ற அடையாளத்தோடு சினிமாவில் வந்தவர் தான் தன்யா ரவிச்சந்திரன். இவர் 2016 -ம் ஆண்டு வெளியான பலே வெள்ளையத் தேவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தன்யா ரவிச்சந்திரன் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கறுப்பன் என்ற படத்தில் நடித்து ரசிகர்களை மனதை கவர்ந்தார்.பார்த்தவுடன் மயக்கும் அழகான நடிகைகளில் ஒருவர்தான் தன்யா ரவிச்சந்திரன்.(Tanya Ravichandran) இவரது இயற்பெயர் அபிராமி ஸ்ரீராம்.பலே வெள்ளையத்தேவா, பிருந்தாவனம், கருப்பன் ஆகிய படங்களில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் அறிமுகமானவர், சினிமாவுக்கு வரும் முன்பே, சில விளம்பர படங்களில் தன்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார்.
இவரை பற்றிய மிக முக்கிய குறிப்பு என்னவென்றால், தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி இவர். காதலிக்க நேரமில்லை படத்தில், ‘உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா? உதவிக்கு வரலமா?’ என மலைப்பாதையில், கார் ரிப்பேரான பெண்களிடம் பாட்டுப்பாடி ஆடுவாரே அவர்தான், ரவிச்சந்திரன். அருணாசலம் படத்தில், ரஜினிக்கு தந்தையாக நடித்தவரும் இவர்தான். தாத்தா ரவிச்சந்திரன், சினிமாவில் இருந்ததால் பேத்தி தன்யாவுக்கும் சிறு வயதில் இருந்தே சினிமா மீது ஆர்வம் இருந்திருக்கிறது.
தன்யாவின் அம்மா, லாவண்யா ஸ்ரீராம், நாட்டியக் கலைஞர் என்பதால் தன்யா மற்றும் மற்றொரு மகளான அபராஜிதா ஆகிய இருவருக்கும் பரதநாட்டியம் கற்றுக்கொடுத்தார். இதனால் தன்யா – அபராஜிதா இருவரது பரதநாட்டிய நிகழ்ச்சி, பல மேடைகளில் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் மிஷ்கின் படத்தில் நடிப்பதாக இருந்த நிலையில், அபிராமி என்ற பெயரை மிஷ்கின்தான், தன்யா என மாற்றம் செய்துள்ளார், ஆனால், அந்த படம் எடுக்க தாமதமானதால், இயக்குநர் ராதா மோகன் இயக்கிய பிருந்தாவனம் என்ற படத்தில், அருள்நிதியுடன் நடித்தார்.
ஆனால், இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, சசிக்குமாருடன் நடித்த பலே வெள்ளையத்தேவா என்ற படத்தில் நடித்து, அந்த படமே, 2016ம் ஆண்டில் முதலில் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. பிருந்தாவனம் படத்தின் விளம்பர காட்சிகளில் இருந்த தன்யாவை பார்த்தே, பலே வெள்ளையத்தேவா படத்தில் நடிக்கும் வாய்ப்பு, தன்யாவுக்கு கிடைத்திருக்கிறது. பிருந்தாவன் படத்தில், தன்யா ரவிச்சந்திரன் நடிப்பு மிகவும் ரசித்து பாராட்டப்பட்டது. அடுத்து, விஜய் சேதுபதியுடன் நடித்த கருப்பன் படமும், ரசிகர்கள் மத்தியில் தன்யாவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.
தன்யா முதலில் நடிப்பதாக இருந்த மிஷ்கின் படம்தான், பின்னாளில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அம்மணி தன்யா, மூன்றே படங்களில்தான் நடித்திருக்கிறார் என்றாலும், தன் வசீகரமான குடும்ப குத்துவிளக்கு அழகால் ரசிகர்களின் மனதில் நிரந்த இடம் பிடித்தவர். புடவை, மாடர்ன் டிரஸ் என எதுவாக இருந்தாலும், அம்மணி பார்ப்பதற்கு குளுமையாக இருப்பதால், இவரது நடிப்பும் நிறைவாக இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது. ரவிச்சந்திரன் என்ற சீனியர் நடிகரின் பேத்தியாக இருந்தும், பெரிய அளவில் தமிழ் சினிமாவில் இவருக்கு இதுவரை கிடைக்கவில்லை.
கமல், விஜய் ஆகியோரது மிக தீவிரமான ரசிகையான தன்யா, அவர்களுடன் நடிப்பதி்ல் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார். அப்படி ஒருவேளை இவர்களுடன் நடிக்கும் வாய்ப்பு அமைந்தால், தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் தன்யா, அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அப்டேட் செய்கிறார். கவர்ச்சியில், அழகில் மின்னலடிக்கும் அந்த புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்து ரசிக்கும்
தன்யா ரசிகர்கள், ரசித்து ரசித்து புளகாங்கிதம் அடைந்து வருகின்றனர் என்ன அழகுடா, என கொஞ்சாத குறையாத, கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். சோசியல் மீடியா பக்கத்தில் தன்யா ரவிச்சந்திரன் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இவர் கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram