நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய கொடுமையான காலங்கள் குறித்து வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார். அதில் அவர் பேசியதாவது சினிமாவில் நான் நடித்துக் கொண்டிருந்த பொழுது குறிப்பாக மகாநதி படத்தையும் நடித்து முடித்த பிறகு ஒரு ஆறு மாதம் எந்த பட வாய்ப்பு எனக்கு வரவில்லை பொருளாதார ரீதியான கஷ்டங்களை எதிர்கொண்டேன். என்னுடைய மனதும் ஒரு நிலையாக இல்லை. அந்த படத்திற்கு பிறகு எனக்கு வந்த கதைகள் எல்லாம் பெண்களை மையப்படுத்தி இருந்தன. எனக்கு கமர்சியலான படங்கள் செய்ய வேண்டும் கமர்சியாலான படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் தொடர்ந்து அப்படியான ஹீரோயின் சென்று
படங்களாகவே வந்து கொண்டிருந்தது. ஆறு மாதம் எந்த படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருக்கிறோமே. என்று ஒரு விதமான பாதுகாப்பு உண்மையை நான் அனுபவித்தேன் .. ஒரு கொடுமையான காலம் அது. அதன் பிறகு தான் நல்லதோ கெட்டதோ நமக்கு வரக்கூடிய வாய்ப்புகளில் நாம் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.நாம் திரையுலகில் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அந்த அளவுக்கு போட்டி இந்த துறையில் இருக்கிறது. ஒரு நடிகையாக ஒரு ஆறு மாதம் ஒரு வருடம் எந்த படமும் கொடுக்கவில்லை என்றால் அந்த இடத்தை மீண்டும் நம்மால் பெற முடியுமா..? என்ற ஒரு சந்தேகமும் எனக்கு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது. அடுத்தடுத்து நாம் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று முடிவு செய்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகு நல்ல படங்கள் கிடைத்தது. அந்த வகையில், நான் ஆசீர்வதிக்கப்பட்டவர் போல் உணர்கிறேன். எல்லோருக்குமே அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு கடினமான சூழ்நிலை வரும் அப்பொழுது தைரியமான சில முடிவுகளை எடுத்தாக வேண்டும். அந்த நேரத்தில் அந்த முடிவுகளை எடுக்க தவறினால் அதனை தொடர்ந்து வரக்கூடிய பிரச்சினைகளுக்கு அவர்கள் மட்டுமே பொறுப்பு என பதிவு செய்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.