விஜய் டிவியின் தொகுப்பாளினி பிரியங்கா தனது கணவரை பிரிந்ததற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பிரியங்கா விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இருப்பினும் இவர் முதலில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மாகாபா உடன் தொகுத்து வழங்கினார்.அதன்மூலம் இவர் பரபலமானார், இவரது காமெடி மற்றும் பேச்சினால் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்.
இவரும் மாகாபாவும் இனைந்து வரும் நிகழ்ச்சி பெரும்பாலும் ஹிட் தான். இவர்களின் காம்போ நகைச்சுவை மிகுந்ததாக ரசிக்கத்தக்கதாக இருக்கும். வெளியான தகவல் இந்நிலையில், இவர் காதலித்து திருமணம் செய்தவரை தற்பொழுது பிரிந்து தனது தாய் வீட்டில் வாழ்ந்து வருகிறார். ஆனால் இது குறித்து எந்த தகவலும் வெளியிடாமல் ரகசியமாகவே வைத்து வருகிறார். தற்பொழுது பிரபல நடிகரான பயில்வான் ரங்கநாதன் இவர் கணவரை பிரிந்து வாழ்வதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து, அவர் கூறுகையில் “ஆங்கர் பிரியங்கா திருமணத்திற்கு பிறகு தனது தாயார் வீட்டில் தான் இருந்துள்ளார் அவரது கணவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது”. இதுவே இவர்களின் பிரிவிற்கு காரணம் என்று கூறியுள்ளார். மேலும் இவர் ஒரு பேட்டியில், “என்னுடைய பக்கத்து வீட்டு பையனை துறத்தி துறத்தி காதலிச்சி இருக்கேன்” என்றும் கூறியிருந்தார். அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.