அமீர்-பாவனி கர்ப்பம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. அமீர்-பாவனி பாவனி ஹைதராபாத்தை சேர்ந்தவர். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அந்த கணவர் குறுகிய காலத்திலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். பின்னர் தனியாக இருந்த பாவனிக்கு சின்னத்தம்பி என்னும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த சீரியல் மூலமாக அவர் மிகப் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமீர் தனது காதலைக் கூறிய நிலையில், பாவனி தனது காதலை தெரிவிக்காமல் இருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து “பிபி ஜோடிகள்” சீசன் 2 நிகழ்ச்சியில் இருவரும் நடன ஜோடியாக பங்கேற்றி அதில் டைட்டிலை தட்டிச் சென்றனர். கர்ப்பம் தொடர்ந்து அமீரின் காதலை ஏற்றார் பாவனி. அதன்பின், இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகின்றனர். மேலும், பிஸியாக கேரியரை பார்த்து வருகின்றனர். அவ்வப்போது சுற்றுலா செல்லும் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்கள்.
இந்நிலையில், பாவனி ஒரு விண்ணப்பத்தை ஃபில் பண்ணும் போது நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்ற கேள்வி இருந்துள்ளது. அதை படித்த பாவ்னியிடம், ஆமாம் என்று அமீர் கூறியுள்ளார். உடனே ஷாக்கான பாவனி ஏன் அமீர், அது இப்போது இல்லை, 5 வருடத்திற்கு பின் தானே கல்யாணம் பண்ணிக்க போறோம் என்று தெரிவித்துள்ளார்.