திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற நடிகர் தனுஷ் மொட்டைஅடித்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. தென்னந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் தனுஷ், பல வெற்றிப்படங்களை கொடுத்த தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் பிஸியாக இருக்கிறார்.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலான நிலையில் ஒரேநாளில் அதிகம் பேர் லைக்ஸ்களை அள்ளிக்குவித்தனர். இந்நிலையில் இன்று காலை தனது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ராவுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றார் தனுஷ்.
அங்கு மகன்களுடன் சேர்ந்து தனுஷ் மொட்டையடித்து நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார், இதுதெரியால் இருக்க கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் தொப்பியும் அணிந்திருந்தார்.ஆனாலும் அவர் மொட்டையுடன் இருக்கும் ஒரே ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது, அடர்த்தியான தாடியுடன் நீளமான முடியும் வைத்திருந்த தனுஷ்,நடிகர் தனுஷ் அடுத்ததாக ‘ராஞ்சனா’ மற்றும் ‘அட்ராங்கி ரே’ போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் புதிய படத்தில் இணைந்துள்ளார்.
கலர் எல்லோ புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்திற்கு “தேரே இஸ்க் மேன்” (Tere Ishk Mein) என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், “தேரே இஸ்க் மேன்” திரைப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மொட்டை அடித்திருப்பதால் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு பெருமளவு முடிந்துவிட்டதாக என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.