நடிகர் மற்றும் புகைப்பட கலைஞர் சுந்தர் ராமு இவர் பெங்களூரில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு டெல்லியில் உள்ள நடக கல்லூரியில் சேர்ந்தார் ஆனால் அங்கு சக மாணவர்களுடன் ஹிந்தியில் பேச கடினமாக இருந்ததாலும். வகுப்புகள் ஹிந்தியில் இருந்ததாலும் அங்கிருந்து விலகினார் .பின்னர் சென்னை லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்தார். அப்போது அவருக்கு புகைப்பட கலை மீது ஆர்வம் வரவே புகைப்படங்கள் எடுக்க துவங்கினார். அதில் இவருக்கு நல்லா முன்னேற்றம் கிடைத்தது.தொடர்து சில நடிகைகளுக்கு புகைப்பட கலைஞர்ராக இருந்தார் மேலும் தனுஷுடன் இணைத்து 3 குறும்பகங்களையும் உருவாக்கினார்.
அதில் ஒரு கதையை தான் செல்வராகவன் மயக்கம் என்ன என்ற படமாக எடுத்தார்.அதில் சுந்தர் ராமு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெறவே. தொடர்ந்து 3 , நான் சிகப்பு மனிதன் , கணிதம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.தொடர்ந்து சில படங்களில் நடித்துவரும் சுந்தர் ராமு புகைப்பட கலைஞர்ராகவும் இருந்து வருகிறார். இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு விவாகரத்து ஆன நிலையில்.18 வயது முதல் 105 வயது வரை உள்ள 335 பெண்களுடன் டேட்டிங் சென்றுள்ளார் சுந்தர் ராமு இவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நிலையில் 105 வயது பாட்டி,
தன்னுடைய அப்பார்ட்மெண்ட் பிளாக்கில் இருந்து குப்பை சேகரிக்கும் ஒரு பெண், 95 வயதில் ஒரு அயர்லாந்தை சேர்ந்த கன்னியாஸ்திரி, நடிகை, மாடல்கள் என இதுவரை 335 பெண்களோடு இவர் டேட்டிங் சென்றுள்ளார்.ஆனாலும் வருடத்தில் 365 நாட்களும் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பெண்களுடன் டேட்டிங் செல்ல வேண்டும் என்பதுதான் இவரின் இலக்காகும். இவரின் இந்த வித்தியாசமான குறிக்கோள் வைப்பதற்கான காரணத்தையும் அவரே கூறியுள்ளார்.அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி 365 டேட்டிங் திட்டத்தை பேஸ்புக் மூலம் அறிவித்த
வர் பெண்கள் என்னிடம் வெளியே வருகிறீர்களா என்று கேட்க வேண்டும், திட்டமிட வேண்டும், உணவிற்கு பணம் கொடுக்க வேண்டும் அல்லது சமைக்க வேண்டும்.உணவில் சேமித்த பணத்தை அதிகம் வெளியே தெரியாத தொண்டு நிறுவனங்களுக்கு ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் வழங்கப் போவதாக இவர் கூறியிருந்தார்.மேலும் சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் சமம் என்பதையும் பெண்களுக்கு தொடர்ந்து நடந்து வரும் பாலியல் கொடுமைகளை தடுக்கவும் தான் இப்படி ஒரு முயற்சி மேற்கொண்டு உள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
அதேசமயம் 365 நாட்கள் செல்ல வேண்டும் என்ற யோசனை அவருக்கு வந்த காரணத்தால் டேட்டிங் செல்லும்போது உங்களை மற்ற பாலினத்தின் இடத்தில் வைத்துப் பாருங்கள் அவர்களின் பிரச்சனையை நீங்கள் இன்னும் நன்றாக புரிந்து கொள்ள முடியும் என்று அவர் கூறியுள்ளார்.அதே சமயம் டெல்லி கும்பல் பலாத்கார சம்பவம் தன்னை உலுக்கிய நிலையில் தன் வாழ்க்கையின் திருப்புமுனையாக இப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தத்தான் 365 நாட்கள் டேட்டிங் என்ற யோசனை வந்ததாக அவர் கூறியுள்ளார்.