முன்னணி நடிகைகளாக இருக்கும் ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, ஸ்ரீதேவி போன்ற நடிகைகளை பாரதிராஜா தான் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி உள்ளார். சமீபத்தில் கூட பாரதி ராஜா, நயன்- விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகி இருந்த ராக்கி படத்தில் பாரதிராஜா நடித்து இருந்தார். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி இருந்தார். இப்போது இந்த வயதிலும் பாரதிராஜா சும்மா பதினாறு வயது போல நடித்து இருந்தார்,
முக்கியமாக இப்போது பாரதி ராஜா மற்றும் குஷ்பு எல்லாம் சேர்ந்த கேப்டன் மகள் என்ற திரைப்படத்தில் நடந்த சுவாரசியமான தகவல்களை சமூக வலைதளத்தில் நடிகை குஷ்பு பகிர்ந்துள்ளார், நடிகை குஷ்பு கூறியதில், பாரதிராஜாவுக்கு பாம்பு என்றால் பயம். கேப்டன் மகள் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் நான் பல் பிடிங்கிய பாம்பை கையில் வைத்துக்கொண்டு பாரதிராஜாவிடம் சென்று பேசினேன். ஆனால் அந்த அநேரத்தில் பாரதிராஜா
அந்த பாம்பை பார்த்து என்ன செய்வது என்றே தெரியாமல் ஓடியுள்ளார், அப்போது பாரதிராஜா முகமே பார்க்க முடியாமல் இருந்தது, அப்போது தான் எனக்கு என் உடம்பிற்கும் எதாவது நடந்தாலோ அல்லது எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தாலோ இவள் தான் காரணம் என்று குஷ்புவை சொல்லியுள்ளார் பாரதிராஜா. இந்த சம்பவம் குறித்து தான் சமீபத்தில் நடிகை குஷ்பூ பேட்டியில் கூறியிரு க்கிறார். தற்போது குஷ்புவின் இந்த பேட்டி வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.