தான் இந்தவொரு விடயத்திற்கு சரியான பயம் என்பதால் தான் நான் தமிழ் திரைப்பட விழாவில் கலந்துக்கொள்வதில்லை என்று பகத் பாசில் தெரிவித்திருக்கிறார். பகத் பாசில் தற்போது அதிகம் ட்ரெண்டிங்கில் இருக்கும் பகத் பாசில் மலையாள திரை உலகில் மாஸ் ஹீரோவாக இருந்து வருகிறார்.மலையாள சினிமாவில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்று பல ரசிகர்களை சம்பாதித்துக் கொண்ட இவர் தமிழில் வேலைக்காரன்,சூப்பர் டீலக்ஸ், புஷ்பா, விக்ரம் என சில படங்களில் நடித்து தற்போது மாமன்னன் திரைப்படத்தில் வித்தியாசமான கதையை தெரிவு செய்து ட்ரெண்டிங் ஆகி வருகிறார்.
மேலும், இவர் தமிழில் நேரம், நய்யாண்டி, ராஜா ராணி போன்ற திரைப்படங்களில் நடித்து ரியாக்சன் குயின் ஆக இருக்கும் நஸ்ரியாவை திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவருக்கும் 12 வருட வயது வித்தியாசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.தமிழை பார்த்து பயப்படும் பகத் பாசில் பகத் பாசில் குறித்து பேசிய பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலா, பகத் பாசில் தமிழ் திரைப்பட விழாக்களில் ஏன் கலந்துக் கொள்வதில்லை எனக் கேட்டபோது,
தனக்கு துல்கர் சல்மான் போல் தமிழ் பேச வாராது, நான் ஏதாவது வார்த்தை சொல்லி அது தவறாக போய்விட்டால் சர்ச்சை ஆகிவிடுமோ என்ற மிகப் பெரிய பயம் இருக்கிறது.அதனால் தான் தமிழ் பட நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளவில்லை எனத் தெரிவித்திருக்கிறார். இதனால் தமிழைக் கண்டு பகத் பாசில் பயப்படுகிராறா? எனப் பலரும் ஆச்சரியம் அடைந்து இருக்கிறார்கள்.