தற்போது எங்கு பார்த்தாலும் காவாலா பாடல் தான் வைரலாகி வருகின்ற வேளையில் அந்தப்பாடலுக்கு நடிகை ரம்யா கிருஷ்ணனும் நடனமாடி வீடியோ பதிவிட்டது தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது. ரம்யாகிருஷ்ணன் தமிழில் வெள்ளை மனசு என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் ரம்யாகிருஷ்ணன். இவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்த அவரை பிரபலமாக்கியது ரஜினியுடன் இணைந்து படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரியாக நடித்து மிரட்டியிருந்தது தான்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள வருகிற ஆகஸ்ட் 10 -ம் தேதி வெளியாக இருக்கிறது. ரம்யாகிருஷ்ணன் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம்,
கன்னடம் என வேறு மொழிப்படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், சில காலம் யாருக்கும் தெரியாமல் இருந்த ரம்யாகிருஷ்ணன் பாகுபலி திரைப்படத்தின் மூலம் ராஜமாதாவாக என்ரி கொடுத்து மீண்டும் பிரபலமாகி இன்று வரைக்கும் பல படங்களில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் எனப் பல நட்சத்திர பட்டாளமே உள்ளனர். சமீபத்தில் வெளியான காவாலா பாடலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
இந்த பாடலுக்கு பல பிரபலங்கள் நடனமாடி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ரீல்ஸ் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் 52 வயதான ரம்யா கிருஷ்ணன் காவாலா பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.அந்தப் படத்தில் இடம் பெற்ற வைரல் பாடலான காவாலா பாடலுக்கும் தமன்னாவிற்கு போட்டி போடும் அளவிற்கு சூப்பராக ஒரு ஆட்டம் போட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்ற வேளையில் ரம்யாகிருஷ்ணனுக்கு வயதே ஆகவில்லை இன்னும் ஹீரோயினாகவும் நடிக்கலாம் என பல கமெண்டுகள் வந்துக் கொண்டிருக்கிறது.
View this post on Instagram