தமிழர்களுக்கு புரோட்டாவைப் பார்த்தாலே இப்போதெல்லாம் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வரும் பரோட்டா சூரியின் காமெடிதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு பரோட்டா சூரி இப்போது பேமஸ். ஆனால் மனிதரின் ஆரம்பகால வாழ்க்கை ரொம்பவே பரிதாபமானது.
இதுகுறித்து பரோட்டா சூரி, ‘குடும்பத்துல ரொம்ப கஷ்டம். அப்போதான் சென்னைக்கு போனா சினிமாவுல நல்லா சம்பாதிக்கலாம்ன்னு நினைச்சு வந்தேன். யாரும் சினிமாவில் சின்ன வேலைகூட கொடுக்கல. இதனால தங்கி இருந்த வீட்டுக்கு வாடகை கொடுக்க மண் அள்ளும் லாரியில் கிளீனரா வேலை செஞ்சேன். அம்மா ஒருநாளு போன் போட்டாங்க. சாப்பிட்டியாப்பான்னு கேட்டாங்க.
நான் பச்சை தண்ணி குடிச்சுட்டு படுத்துருக்கேன்னு சொன்னேன். அம்மா கதறி அழுது மயங்கி விழுந்துட்டாங்க.’எனச்சொல்லியிருந்தார் புரோட்டா சூரி. சூரி, சினிமாவுக்கு போய் தொடக்கத்தில் ரொம்பவும் கஷ்டப்பட்டார். ஊரில் அவருக்கு திவாகர் என்பவர் நல்ல நண்பராக இருந்தார். ஏழு ஆண்டுகள் கழித்து ஊருக்குப் போனவர் அவரைத் தேடிப் போனார்.
. ஆனால் அவர் இறந்துவிட்டதாக சொல்லப்பட கடும்கட அதிர்ச்சியடைந்தார் சூரி. கடந்த தீபாவளியை தன் சொந்த ஊரில் கொண்டாடினார் சூரி அது டிவியிலும் ஒளிபரப்பானது. அப்போதும் இதை மிகவும் வருத்தத்தோடு பதிவு செய்தர் புரோட்டா சூரி.