தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கை முடித்ததை தொடர்ந்து தானே இயக்கி நடிக்கவுள்ள டி50 படத்தின் வேலைகளில் இறங்கியிருக்கிறார். தனுஷ் என்றாலே நடிகைகளுடன் வீக் என்றும் நெருக்கமாக நடிக்காமல் இருக்க மாட்டார் என்ற விமர்சனமும் எழுந்து வரும். அப்படி பல நடிகைகளுடன் நெருக்கமாக இருந்த காரணத்தாலே 18 வருடங்களுக்கு பின் தனுஷை விட்டு அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிந்துவிட்டார்.
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் தனுஷ் நடிப்பில், அவருக்கு ஜோடியாக நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்து படம் சிற்றம்பலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அப்படத்தில் நடிகை நித்யா மேனன் ரோலில் நடிக்க முதலில் நடிகை நயன் தாரா விடம் தான் கேட்டார்களாம்.
ஆனால் சில காரணங்களால் நயன் தாராவால் நடிக்க முடியாமல் போக அப்படம் நித்யா மேனன் கையில் சென்றது. அப்படி நயன் தாரா மட்டும் அப்படத்தில் நடித்திருந்தால் திருமணமாகாத சமயத்தில் கிசுகிசுவில் சிக்கி இருப்பார். ஆனால் பல நடிகைகள் தனுஷ் வலையில் சிக்கியது போல், சிக்காமல் தப்பித்து நழுவி இருக்கிறார் நடிகை நித்யாமேனன் .