‘படிக்காதவன்’ படத்தில் நடித்த துணை நடிகர் பிரபு புற்றுநோயால் மரணமடைந்துள்ளார். தமிழ் சினிமாவில் துணை நடிகராக இருந்தவர் பிரபு. கடந்த 2009-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘படிக்காதவன்’ படத்தில் துணை நடிகராக நடித்தார். ஒரு காட்சியில் தனுஷ் வீட்டில் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையாக நடித்திருப்பார். அந்த காட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். கோலிவுட் திரையில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடித்து திரைக்கு வந்த படம் தான் படிக்காதவன். இப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகர் பிரபு. மேலும் இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்துள்ளார்.
இப்படி சினிமாவில் பிசியாக நடித்து நல்ல வருமானம் பார்த்து வந்த இவர், நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பழத்துக்கு ஆளாகியுள்ளார். இதன் பிறகு ஒரு கட்டடத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் ஆதரவற்ற நிலையில் தவித்துள்ளார். இதை அறிந்த இசையமைப்பாளர் டி. இமான் இவருக்கு ஆதரவு கொடுத்து சிகிச்சை பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பிரபு உயிரிழந்துள்ளார்.நடிகர் பிரபு, கடந்த சில நாட்களாகவே புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.
சினிமாவில் எத்தனையோ படங்களில் நடித்த இவர் இப்படியொரு நிலையில் இருப்பது வெளியுலகிற்கு பெரிதும் தெரியாமலே போனது. நிதிப்பிரச்சனை காரணமாக புற்றுநோய்க்கு ஏற்ற சிகிச்சையை இவரால் எடுத்துக்கொள்ள முடியாமல் போனது. பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இவரது நிலைமையை அறிந்து இவருக்கு உதவி செய்துவந்தார். துணை நடிகர் பிரபுவைத்தேடி யாரும் வராத நிலையில் அவரது உடல் கேட்பாரற்று கிடந்துள்ளது. இதையடுத்து, நடிகர் பிரபுவிற்கு உதவி செய்து வந்த டி.இமானே அவருக்கு இறுதி மரியாதையும் செய்தார். பிரபுவின் உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தமிழ்சினிமாவில் உள்ள பெரிய நட்சத்திரங்களின் மீது மட்டுமே அதிகம் கவனம் செலுத்தும் ரசிகர்கள், துணை கதாப்பாத்திரங்களை எளிதில் மறந்துவிடுவது போல, துணை நடிகர்களையும் மறந்துவிடுகிறார்கள். பிரபல வில்லன் நடிகராக இருந்த பொன்னம்பலம் சில வாரங்களுக்கு முன்னர் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் அதை கவனிக்கவாே சிகிச்சைக்கோ தன்னிடம் பணம் இல்லை என்றும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், அவருக்கு அப்போலோ மருத்துவமனையின் சார்பில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான செலவை சிரஞ்சீவி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியிருந்த வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்திருந்தவர், வைரவன். இவரும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் வீடியோ பதிவினை வெளியிட்டிருந்தார். அதன்பிறகுதான் பல நட்சத்திரங்கள் அவருக்கு உதவி செய்ய முன்வந்தனர். இப்படி துணை கதாப்பாத்திரங்களில் நடிப்பவர்கள் பலர் உடல் நிலை சரியில்லாமல் போகும் போது அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள
கூட கையில் பணம் இல்லாமல் இருக்கும் நிலை மக்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. மேலும் இந்த செய்தியை டி. இமான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதோடு இவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்து,அவரது உடலை தகனம் செய்து ள்ளார். இந்த செய்தியை அறிந்த திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
Actor Prabhu (Padikkathavan and Numerous other films) is no more with us. He had suffered from stage 4 cancer.
And Ascended to the other world this morning.Doctors,nurses,social activists tried their level best to retrieve him.But couldn’t.
Rest In peace brother. My heartfelt… pic.twitter.com/2Yu74ZDieN— D.IMMAN (@immancomposer) June 14, 2023