காளி திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தவர் ஷில்பா மஞ்சுநாத். தனது கல்லூரி படிப்பிற்கு பின்னர் மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டார் ஷில்பா மஞ்சுநாத். மாடலிங் துறையில் பணியாற்றி 2013-ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற அழகி போட்டியில் போட்டியாளராக பங்குபெற்று, 2013ஆம் ஆண்டின் “மிஸ் கர்நாடக” என்ற பட்டம் வென்று புகழ் பெற்றுள்ளார். மாடலிங் துறையில் வெற்றி பெற்று சாதித்த இவர், பின் கன்னட தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் ஒளிபரப்பான பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான “லைப் சூப்பர் குரு” என்ற நிகழ்ச்சியின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.இதனையடுத்து 2016 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான, முன்கரு மலே 2 என்ற படத்தில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமாகினார்.
இப்படத்திற்கு பின்னர் இவர் மலையாளத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான, ரோசாப்பூ என்ற திரைப்படத்தில் நடித்து மலையாள திரையுலகிலும் அறிமுகமானார். காளி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ஷில்பா. ஆனால் அதில் கிடைக்காத புகழ் அவருக்கு இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகம் கிடைத்தது. இதில் இடம் பெற்றுள்ள, கண்ணம்மா உன்ன என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று பிரபலமானது, அந்த படம் அவருக்கு அறிமுகத்தை கொடுத்தாலும் அவரை பிரபலப்படுத்தவில்லை. பின்னர் இந்த காலத்து காதல்,எல்லை மீறிய ரொமான்ஸ் உள்ளிட்டவை உள்ளடக்கிய
‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். இந்த படத்தில் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து சிறந்த Pair என ரசிகர்களால் ரசிக்கப்பட்டார்.இருந்தும் அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தாறுமாறான கவர்ச்சியில் ததும்ப ததும்ப கிளாமர் காட்டி கிறுகிறுக்க வைத்தார். தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஹாட்னஸ் அள்ளி தெளித்து வரும் ஷில்பா மஞ்சுநாத்தற்போது டைட்டான பனியன் அணிந்து கை ரெண்டையும் மேலே தூக்கி செம ஹாட்டாக போஸ் கொடுத்து இணையவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.