பிரபல மலையாள நடிகர் விநாயகன். இவர், தமிழில் விஷாலின் ‘திமிரு’, சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’, ஆர்.கே.நடித்த ‘எல்லாம் அவன் செயல்’, கார்த்தியின் ‘சிறுத்தை’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இவர், மனைவி பபிதாவைப் பிரிந்துவிட்டதாக, தனது சமூக வலைதளப் பக்கத்தின் நேரலையில் தோன்றி தெரிவித்துள்ளார். “எனக்கும் என் மனைவிக்கும் இடையிலான திருமண உறவு இப்போதிருந்து முடிவுக்கு வருகிறது” என்று கூறியுள்ளார். பபிதா வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டார் என்று கொண்டாடப்படும் நடிகர்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளியான இப்படத்தை நெல்சன் இயக்க சன் பிச்சர்ஸ் தயாரித்திருந்தது. ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால், யோகி பாபு, சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெரோஃப் என பல திரையுலக சேர்ந்த நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.இதில் ரஜினிக்கு வில்லனாக நடித்து மிரட்டியவர் நடிகர் விநாயகன்.
இவரை நாம் விஷால் நடித்த திமிரு திரைப்படத்தில் தான் முதன் முதலில் பார்த்திருப்பம். விநாயகன் சம்பளம் ஆனால், இவர் மலையாளத்தில் தனது சிறப்பான நடிப்பினால் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.இந்நிலையில், ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நடிகர் விநாயகன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிக்க ரூ. 35 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளாராம்.