தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஜொலிக்கும் ரஜினி வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அந்த வகையில் அண்ணாத்த படத்தை தொடர்ந்து இளம் இயக்குனர் நெல்சன் உடன் கூட்டணி அமைத்து ஜெயிலர் படத்தில் நடித்தார். படம் 4000 திரையரங்கிற்கு மேல் வெளியானது படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவ ராஜ்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, தமன்னா, வசந்த் ரவி என பலர் நடித்திருந்தனர் ஜெயிலர் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் மிரட்டலாக இருந்தது. மேலும் ஆக்சன் சென்டிமென்ட் சிறப்பாக இருந்ததால் ரசிகர்களின் தாண்டி
குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அதனால் ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூலே 90 கோடிக்கு மேல் அள்ளியது அடுத்த அடுத்த நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அள்ளியது இதுவரை நான்கு நாட்கள் ஆகிய நிலையில் சுமார் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் நடிகர் சுனில் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் சுனில் தமன்னாவை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஒவ்வொன்றும் ரசிகர்களை சிரிக்க வைத்தது இந்த நிலையில் இவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.அதன்படி சுனில் ஜெயிலர் படத்தில் நடிக்க சுமார் 60 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது இதனை தொடர்ந்து அவர் கைவசம் கேம் சேஞ்சர், மார்க் ஆண்டனி, ஜப்பான், புஷ்பா 2 போன்ற படங்களில் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.