இந்திய திரையுலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று ஜவான். பிகில் படத்திற்கு பின் அட்லீ இயக்கத்தில் மாபெரும் பொருட்செல்வவில் உருவாகியுள்ள இப்படத்தில் பாலிவுட் பாஷா ஷாருக்கான் நடித்துள்ளார். மேலும் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ப்ரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து இணையத்தை அதிரவைத்தது.
நயன்தாரா சம்பளம் இதை தொடர்ந்து படத்தின் பாடல்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். இப்படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி மற்றும் படத்தின் இயக்குனர் அட்லீயின் சம்பளம் விவரம் குறித்து ஏற்கனவே பார்த்திருந்தோம்.
அதை தொடர்ந்து தற்போது நடிகை நயன்தாரா வாங்கி சம்பள விவரம் வெளிவந்துள்ளது. அதன்படி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை நயன்தாரா ரூ. 8 கோடி முதல் ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.