சினிமாவிற்கு வந்த வேகத்தில் பிரபலமாகி, அதே வேகத்தில் திருமணம் செய்துகொண்டு சினிமா வாழ்க்கைக்கு தற்காலிகமாக முற்றுப் புள்ளி வைத்தவர் நடிகை நஸ்ரியா நாஸிம். வில்லன், ஹீரோ, காமெடி என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்ளை கவர்ந்து வருபவர் தான் ஃபஹத் பாசில். இவர் சூப்பர் டீலக்ஸ், விக்ரம், வேலைக்காரன் போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.தன்னுடைய பன்னிரெண்டாவது வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பத்தொன்பது வயதில் கதாநாயகியாக அறிமுகமாகி இருபது வயதில் திருமணம் செய்து கொண்டார். மலையாளத்தில் நான்கு, தமிழில் மூன்று, தமிழ்-மலையாளம் பை-லிங்குவலில் இரண்டு என கதாநாயகியாக இரண்டு ஆண்டுகளிலேயே ஒன்பது படங்களில் நடித்துவிட்டார்.
பெங்களூரு டேஸ் படத்தில்தான் முதன் முதலில் ஃபகத் ஃபாசிலுடன் நடித்தார். படத்தில் வெறுப்பைக் காட்டும் கணவன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தாலும், நிஜத்தில் காதலை பற்ற வைத்து ஒரே ஆண்டிற்குள் திருமணத்தையும் முடித்துவிட்டார் ஃபகத். இவர்களது திருமணத்தை இவர்களை விட பெற்றோர்கள்தான் மும்மரமாக நடத்தியதாக கூறியுள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆன சமயம் ஃபகத்துக்கும் நஸ்ரியாவிற்கும் பன்னிரெண்டு வயது வித்தியாசம் உள்ளது என மக்கள் விமர்சித்தனர்.
திருமணத்திற்கு முன்பு பேங்களூர் டேஸ், திருமணம் ஆன பின்பு டிரான்ஸ் என்று இரண்டு படங்களில் மட்டும்தான் இருவரும் ஒன்றாக நடித்துள்ளனர். ஃபகத் ஒரு மெத்தட் ஆக்டர். ஆனால் நான் அப்படி இல்லை, கட் சொல்லிவிட்டால் இயல்பாகிவிடுவேன். ஆனால் ஃபகத்திடம் அது நடக்கவே நடக்காது என்று கூறி ஒரு சம்பவத்தையும் பகிர்ந்துள்ளார் நஸ்ரியா. தற்போது மாரி செல்வராஜ் உதயநிதி கூட்டணியில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் வருகிற ஜூன் 29 -ம் தேதி வெளியாக இருக்கிறது.ஃபஹத் பாசில் ஒருமுறை பாத் ரூமில் பயங்கரமாக கத்தினாராம் பின்னர் பெட் ரூம் வந்த பிறகும் மோசமாக கத்தியுள்ளார். அப்போது நஸ்ரியா என்ன ஆச்சு என்று விசாரித்த போது தான் தெரிகிறது ஃபஹத் பாசில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாரோ அது போல மாறிவிடுவாராம். இதையடுத்து நஸ்ரியா ஃபஹத் பாசில் இடம், ” நீங்கள் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் வீட்டிற்கு வந்த பிறகு அதையெல்லாம் மறந்துவிட வேண்டும். இல்லையென்றால் மனநிலை மருத்துவரிடம் கொண்டுபோய்விட்டுவிடுவேன்.
மேலும் மீடியாவிடம் நீங்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்லிவிடுவேன்” என்று நஸ்ரியா கூறியுள்ளார். அதில் இருந்து ஃபஹத் பாசில் இது போன்று செய்வதை நிறுத்திவிட்டதாக பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.பெங்களூரு டேஸ் படத்தின் ஷூட்டிங்கின் போது, இடைவெளியில் தன்னுடன் கலகலப்பாக பேசுவார் என்றும் அப்படித்தான் காதல் மலர்ந்ததாகவும், மனைவியை வெறுக்கும் தாஸ் கதாப்பாத்திரமாக கேமரா முன்பு நடிக்க அரம்பித்தவுடன், “ஹலோ யாருயா நீ இப்ப இங்க என்ன நடந்துச்சு?”
என்று தான் யோசிக்கும் அளவிற்கு கேரக்டராக மாறி விடுவார் என்றும் சில சமயம் வீட்டிலும் அது தொடரும் என்றும் கூறியுள்ளார். மேலும் இருவரும் சேர்ந்து தயாரித்த கும்பலங்கி நைட்ஸ் படத்தில் சைக்கோவாக நடிக்கும்பொழுது, சைக்கோ எல்லாம் செட்டில் மட்டும்தான் இருக்க வேண்டும், வீட்டிற்குள் வரக் கூடாது என்று தான் மிரட்டி வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.
திருமணமாகி நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, கூடே என்கிற மலையாளப் படத்தில் நடிகர் பிரித்விராஜுடன் சேர்ந்து மீண்டும் கதாநாயகியாக நடித்தார். அதன் பின் இப்போது நடிகர் நானியுடன் சேர்ந்து அண்ட்டே சுந்தரனிகி என்கிற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த ஜூன் பத்தாம் தேதி வெளியான இந்தத் திரைப்படம்தான் நஸ்ரியாவின் முதல் தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.