தனுஷ் நடிப்பில் வெளிவந்த காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக பிரபலமானவர் தான் நடிகை சோனியா அகர்வால்.செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சோனியா அகர்வால். செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை படங்களிலும் சோனியா அகர்வால் நாயகியாக நடித்திருந்தார். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் 2010ல் விவாகரத்துப் பெற்று பிரிந்தனர். தற்போது இதுகுறித்து பேசியுள்ள சோனியா அகர்வால், செல்வராகவன் பற்றி காட்டமாக விமர்சித்துள்ளது வைரலாகி வருகிறது.தமிழில் மிக முக்கியமான இயக்குநர்களில் செல்வராகவனும் ஒருவரும்.
துள்ளுவதோ இளமை படம் மூலம் தம்பி தனுஷ் நடிகராகவும், அண்ணன் செல்வராகவன் இயக்குநராகவும் அறிமுகமாகினர். இவர்கள் கூட்டணியில் துள்ளுவதோ இளமையை தொடர்ந்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, நானே வருவேன் படங்களும் வெளியாகின. இவர் கடந்த 2006 -ம் ஆண்டு இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சோனியா அகர்வால் பற்றி பேசி இருக்கிறது. அதில் அவர் கூறுகையில்,
இயக்குநர் செல்வராகவன் முரட்டுப் பிடிவாதம் கொண்டவர். கணவன், மனைவியாக இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் நண்பர்களாக தொடர முடியாது. இனி என்னுடைய வாழ்க்கையில் செல்வராகவன் முகத்தை பார்க்க மாட்டேன் என்று சோனியா அகர்வால் கூறியுள்ளார். செல்வராகவன் குறித்து அவரது முதல் மனைவி இவ்வாறு கூறியது ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் சோனியா அகர்வால் இப்படி கூறியதற்கான காரணம், அதன் பின்னணி குறித்து எதுவும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.