இன்று இரண்டாம் மனைவி மற்றும் குழந்தையுடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் பிரபுதேவாவின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் பிரபுதேவா தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபுதேவா. இவர் நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர். இவர் 1995ம் ஆண்டு ராம்லதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு விஷால், ரிஷி ராகவேந்திர தேவா, ஆதித் தேவா என்று 3 மகன்கள் பிறந்தனர். இதில், மூத்த மகன் விஷால் கடந்த 2008ம் ஆண்டு உயிரிழந்தார். இதன் பின் சில கருத்து வேறுபாடு காரணமாக தன் மனைவி ராம்லதாவை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. கடந்த ஆண்டு பிரபுதேவா உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக சமூகவலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டது. முதுகுவலி பிரச்சினை காரணமாக
பிசியோதெரபிஸ்ட் ஒருவரிடம் பிரபுதேவா சிகிச்சை பெற்று வந்ததாகவும், அவருக்கு சிகிச்சை பார்த்த பெண் மருத்துவருக்கும், பிரபுதேவாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. சமுத்த கவலையடுத்து, பிரபுதேவா இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என்று சகோதரர் ராஜு சுந்தரமும் கூறினார். இதுநாள் வரைக்கும் தன் 2ம் மனைவியை வெளியே காட்டாமல் இருந்து வந்தார். குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பிரபுதேவா சமீபத்தில் பிரபுதேவா ஒரு பேட்டியில், எனக்கு 2ம் திருமணம் முடிந்து, குழந்தை பிறந்தது உண்மைதான்.
நான் 50-வது வயதில் மீண்டும் தந்தையாகி இருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சி மற்றும் நிறைவாகவும் இருக்கிறேன். என் வம்சத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை என்றார். இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பிரபுதேவா தன் மகள் மற்றும் மனைவியுடன் இன்று திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அந்த வீடியோவில் இரண்டாம் மனைவி தன் கையில் பெண் குழந்தையை பிடித்தவாறு திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.