திமுகவை சேர்ந்த பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியதாக பாஜக நிர்வாகியும், நடிகையுடன் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்த போது கண்ணீர் விட்டு அழுதார். சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனது அலுவலகத்தில், குஷ்பு இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெண்களை அசிங்கப்படுத்தி பேசுவது தான் திராவிட மாடலா? பெண்களை அவதூறாக பேச யார் உரிமை கொடுத்தது? பதவியில் உள்ள எனக்கே இந்த நிலை என்றால் மற்ற பெண்களுக்கு என்னவாகும்?ஸ்டாலின் அவர்களே உங்கள் கட்சியில் உள்ள அனைவரிடமும் சொல்கிறேன், குஷ்புவை சீண்டி பார்க்காதீர்கள்.
ஸ்டாலின் கண்களை பார்த்து பேச எனக்கு தைரியம் உண்டு, குஷ்பு பதில் கொடுத்தால் தாங்கமாட்டீர்கள். இவரை பேசவிட்டு திமுகவின் முதல்வர் குடும்பத்தினர் வேடிக்கை பார்க்கின்றனரா? சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் 3 மாதத்தில் மீண்டும் கட்சிக்குள் வந்த எப்படி? கைதட்டலுக்காக பெண்களை அசிங்கமாக பேசுகிறீர்கள், இதை அவர் வீட்டில் உள்ள பெண்கள் எப்படி எடுத்துக்கிறார்கள் என்று தெரியவில்லை. எந்தவொரு ஆணுக்கு பெண்ணை தவறாக பேச உரிமையில்லை, பெண்ணை இழிவுபடுத்தினால் அவரது தாய்- தந்தையை இழிவுபடுத்தியதற்கு சமம்.
ஒரு பெண்ணை இழிவாக பேசினாலும் நான் சும்மாக இருக்கமாட்டேன், உக்காந்து அடிப்பேன். அடிக்குற தைரியம் எனக்கு இருக்கு. அவர்கள் பாஷையில் என்னால் பதில் சொல்ல முடியும், ஆனால் அப்படி பேசி என் வளர்ப்பை அசிங்கப்படுத்த விரும்பவில்லை. கடந்த முறை மன்னிப்பு கேட்டதால் அப்படியே விட்டுவிட்டேன். வேற இடமாக இருந்திருந்தால் செருப்பால் அடித்திருப்பேன். செருப்பால் அடிக்கும் தைரியம் எனக்கு உள்ளது. கலைஞர் இருக்கும் போது இருந்த திமுக இல்லை இது என ஆவேசமாக பேசிக்கொண்டிருக்கும் போது கண்ணீர் சிந்தினார்.