பிரபல இயக்குனரான கௌதம் மேனன் மற்றும் சிம்புவிற்கு இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.சிம்பு மாநாடு வெற்றிக்குப் பிறகு வேற லெவலில் உருமாறி இருக்கிறார். அவருடைய அடுத்த அடுத்த படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி வருவதால் அவரது மார்க்கெட் உயரத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி தனது சம்பளத்தையும் சிம்பு இப்போது பல மடங்கு உயர்த்தி விட்டாராம். அடுத்ததாக கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் புதிய படத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார். சமீபத்தில் சிம்புவின் நியூ லுக் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டானது. இந்நிலையில் சிம்புக்கு ஒரு சரியான திருப்புமுனையை ஏற்படுத்திய படம் விண்ணைத்தாண்டி வருவாயா.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இப்போது வரை இந்த படம் ரசிகர்களால் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து கௌதம், சிம்பு கூட்டணியில் அச்சம் என்பது மடமையடா படம் வெளியானது. அதற்கு அடுத்தபடியாக சமீபத்தில் வெந்து தணிந்தது காடு படமும் இதே கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்றது. ஆனால் சிம்பு, கௌதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்பில்லை என்பது போல ஒரு செய்தி பரவி வருகிறது. அதாவது வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பில் சிம்புக்கு சரியான மரியாதை கௌதம் மேனன் கொடுக்கவில்லையாம்.
இதனால் அவர் மீது சிம்பு அதிருப்தியில் இருந்து உள்ளார். ஆகையால் மனம் இல்லாமல் தான் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்து கொடுத்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக சிம்பு பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் சிம்புவின் ரசிகர்கள் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இந்த சூழலில் மீண்டும் கௌதம் மேனன் உடன் கூட்டணி போட சிம்பு தயாராக இல்லை என்று அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. சிம்பு – கௌதம் மேனன் காம்போ
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான கௌதம் மேனன் பல ரொமான்டிக் படங்களை இயக்கி அதில் ஹிட் கொடுத்துள்ளார். இதல் சிம்பு – கெளதம் மேனன் கூட்டணியில் வெளியான திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா.2010ம் ஆண்டு வெளியான இந்தப் படம் பெரிய ஹிட் கொடுத்தது. இதனையடுத்து அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு படங்களிலும் இவர்கள் இணைந்து ஹிட் கொடுத்தனர். இதில் வெந்து தணிந்தது காடு கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், இதில் கேங்ஸ்டர் ஜானரில் உருவான இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்துக்கான லீட் கொடுத்திருந்தார்.
மோதல் இந்நிலையில், இந்த படத்தின் 2வது பாகம் எடுப்பதற்காக கௌதம் மேனன் சிம்புவிடம் பேசியுள்ளார். அப்பொழுது சிம்பு, தற்போது STR 48 படத்தில் நடிக்கவிருப்பதை காரணம் காட்டி கெளதம் மேனனை ரிஜக்ட் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.அதனால், இயக்குனர் மலையாளத்தில் ஒரு படம் இயக்கலாம் என கிளம்பிவிட்டார். அதில், மம்முட்டி, ஃபஹத் பாசில் இருவரையும் இணைந்து நடிக்க வைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது மலையாள திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.