தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்த நடிகர் கருணாஸ், சினிமாவை விட்டு முழுக்க முழுக்க விலகி விவசாயத்தில் ஈடுபட்ட செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் நந்தா என்ற சூர்யா படத்தின் வாயிலாக முன்னணி காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் கருணாஸ். இவர், அஜித், தனுஷ், கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இது போக, திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, ரகளபுரம், டார்லிங் உள்ளிட்ட பல படங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வந்தார். இவர், பிரபல பாடகி கிரேஸ் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இவருக்கு கென் என்ற மகனும், டயானா என்ற ஒரு மகளும் உள்ளனர். அவர் மகன் நடிகர் தனுஷ் உடன் அசுரன் படத்தில் நடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில், இவர் தற்போது சினிமாவில் நடிக்காமல் அரசியலில் ஈடுபட்டு வந்தார்.
ஆனால், தற்போது நடிகர் கருணாஸ் முழுக்க முழுக்க சினிமாவில் இருந்து விலகி விவசாயத்தில் ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை கேள்விப்பட்ட இவரது ரசிகர்கள் இனி இவரை திரையில் பார்க்க முடியாதா என ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.