பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கஜோல் சமூக வலைத்தளங்களில் விலகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் குயின் பாலிவுட் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை கஜோல். இவர் இந்தியிலுள்ள ஷாருக்கான், சல்மான் கான் என அனைத்து நட்சத்திர நாயகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து சினிமாவில் நடித்து கொண்டு நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் பல திரைப்படங்கள் இணைந்து நடித்தார்கள். இந்தி மட்டுமல்ல தமிழ் சினிமாவிலும் நடிகர் தனுஸ் உடன் இணைந்து “வேலையில்லா பட்டதாரி 2 ” என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இருந்து திடீர் விலகல் இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் விலகப்போவதாக டுவிட்டர் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இவ்வளவு காலங்கள் ஆக்டிவாக இருந்து விட்டு திடீரென விலகுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் நடிகை கஜோல் “என் வாழ்க்கையின் கடினமான சோதனைகளில் ஒன்றை எதிர்கொள்கிறேன். சமூக ஊடகங்களிலிருந்து ஓய்வு எடுத்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். மாறாக இதற்கான காரணத்தை பதிவிடவில்லை. இதனை தொடர்ந்து கஜோல் அவரின் இன்ஸ்டா பக்கத்தில் திரைப்பட போஸ்ட்களையும் அழித்துள்ளார் என்பதும் உறுதியாகியுள்ளது.
Taking a break from social media. pic.twitter.com/9utipkryy3
— Kajol (@itsKajolD) June 9, 2023