விஜய் டிவி சீரியல் நடிகை வைஷாலி எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியதாகவும், அதிர்ஷடவசமாக உயிர் தப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.பிரபலமான சின்னத்திரை நடிகையாக வளம் வருபவர் வைஷாலி. விஜய் டிவியில் ஒளிபரப்பான “ராஜா ராணி”, “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மற்றும் “மாப்பிள்ளை” போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது, “முத்தழகு” என்ற தொடரில் நடித்து வருகிறார். எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்து சீரியல்கள் மட்டும் இன்றி, சில திரைப்படங்களிலும் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு நேர்ந்த விபத்து குறித்து பேசி வெளியிட்டுள்ள வீடியோ அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
வைஷாலி வெளியிட்டுள்ள வீடியோவில், நான் தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த போது… டிரைவர் பேரி கார்டு உள்ளதை கவனிக்காமல் திரும்பிவிட்டார். இதனால் நான் சென்ற கார் ஒரு விபத்தில் சிக்கியது. அதில் எனக்கு சிறிய அளவிலான காயங்கள் மட்டுமே ஏற்பட்டது. ஒரு வேலை சீட் பெல்ட் மற்றும் ஏர் பேக் இல்லாமல் போயிருந்தால், மிகப்பெரிய விபத்தாக இருந்திருக்கும். எனவே நீங்களும் சாலையில் செல்லும் போது மிகவும் கவனமாக பார்த்து செல்லுங்கள். கண்டிப்பாக சீட் பெல்ட் அணியுங்கள் என தெரிவித்துளளார்.
இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தான் சந்தித்த விபத்து குறித்து அவர் தெரிவித்துள்ளார்.அந்த வீடியோவில் அவர், அண்மையில் தான் தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு காரில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கார் விபத்துக்கு உள்ளானதாக குறிப்பிட்டு, தான் சீட் பெல்ட் போட்டிருந்த காரணத்தாலும், வண்டியில் ஏர் பேக் சரியான நேரத்தில் வேலை செய்ததால் தான் உயிர் தப்பியுள்ளதாக வைஷாலி தெரிவித்துள்ளார்.
View this post on Instagram