சம்பாதித்த பணத்தில் பிரம்மாண்ட கார் வாங்கிய Bigboss தனலட்சுமி…! அந்த காரின் விலையை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்…!

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் எளிதில் பிரபலம் ஆகிவிடலாம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் தான் தனலட்சுமி இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொதுமக்கள் என்கிற அடையாளத்தோடு களமிறங்கினார். பல்வேறு கட்ட ஆடிஷன்களில் இருந்து இறுதியாக தேர்வு செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றவர் தான் தனலட்சுமி..பலரை வெறுப்பும் ஏற்றியவர் எனவும் சொல்லலாம்.பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றதற்கு இவரும் ஒரு பெரிய காரணமாக இருந்தார். அந்நிகழ்ச்சியில் அசீமுக்கு அடுத்தபடியாக அதிகளவில் சண்டையில் சிக்கியவர் தனலட்சுமி தான்.

முதலில் அசல் கோளாரு தன்னை ஆண்ட்டி என அழைத்ததை எதிர்த்ததில் இருந்து, அசீமுக்கு பொம்மை டாஸ்க்கில் பதிலடி கொடுத்தது வரை இவர் போட்ட சண்டைகள் நியாயமானதாகவே இருந்தன…ஆனால் அதன் பின் இவர் செய்தது கடுப்பு தான் ஏற்றியது..இதன்காரணமாக தான் 70 நாட்களுக்கு மேலாக அந்நிகழ்ச்சியில் தாக்குப்பிடித்தார் தனலட்சுமி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகளவு கண்டெண்ட் கொடுத்தவராக தனலட்சுமி இருந்ததால், அவருக்கு சம்பளமும் வாரி வழங்கப்பட்டது.

அந்நிகழ்ச்சி மூலம் மட்டும் இவருக்கு மொத்தமாக ரூ.11 லட்சத்துக்கு மேல் சம்பளம் கிடைத்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தனலட்சுமி புதிதாக கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். கியா சோனட் கார் வாங்கி இருக்கும் தனலட்சுமி அதுகுறித்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.இதற்கு வாழ்த்துகளை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர் இதன் விலை 10 லட்சமாம்.

 

View this post on Instagram

 

A post shared by dhanalakshmi B (@dhanalakshmioffl_)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *