தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தான் நாக சைதன்யா.சமீபத்தில் இவர் நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் கஸ்டடி திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளிவந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர். இவர் கடந்த 2017 -ம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில காரணத்தால் இருவரும் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து இருவருமே சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் நாக சைதன்யா சமந்தா-வை காதலித்து திருமணம் செய்து கொண்டு விவாகரத்து வாங்கி பிரிந்தார். இவர்களின் பிரிவிற்கு அவர்களின் குடும்பத்தார் முதல் ரசிகர்கள் வரை சோகத்தில் மூழ்கினர்.
இருப்பினும் அவர்கள் மீண்டும் ஒன்று சேருவார்கள் என ரசிகர்கள் எண்ணிய நிலையில் வெறும் ஏமாற்றமே மிச்சமானது. இதனை தொடர்ந்து சமந்தா-வை கழட்டிவிட்ட கொஞ்சம் மாதங்களில் நாக சைதன்யா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வந்தார். அவர் எங்கு சென்றாலும் சோபிதா-வை அழைத்து சென்று வந்தார். சமீபத்தில் கூட பிரபல ஹோட்டலுக்கு சோபிதாவுடன் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சோபிதாவையும் நாக சைதன்யா டீலில் விட்டதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது எல்லா இடத்துக்கும் ஜோடியாக சென்று வந்த நாக சைதன்யா – சோபிதா
சமீப காலமாக அவர்கள் இருவரையும் ஒன்றாகவே பார்க்க முடியவில்லை என்றும் பேசிக்கொள்வது கூட இல்லை என்று தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இது சம்பந்தமாக அவர்கள் தரப்பில் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சோபிதா துலிபாலாவும் காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டு. இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் தற்போது நாக சைதன்யாவும் நடிகை சோபிதா துலிபாலாவும் பிரேக் அப் செய்துவிட்டதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.