மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வரும் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான் மலையாளம் படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் பல படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வந்த துல்கர் சல்மான், King of Kotha என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளும் வெளியாகவுள்ளது. King of Kotha படத்தின் ஐட்டம் பாடலான கலாட்டாக்காரன் பாடல் வெளியாகியுள்ளது.துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா ஆகஸ்ட் 24 அன்று வெளியாக உள்ளது. சுமார் ரூ. 50 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த மலையாளப் படம் துல்கரின் மிகவும் லட்சிய திட்டங்களில் ஒன்றாகும்.
மலையாளத் திரையுலகில் இருந்து வரும் லேட்டஸ்ட் செய்தி என்னவென்றால், துல்கரின் கிங் ஆஃப் கோத்தா மலையாளத் திரையுலகில் ரிலீஸுக்கு முந்தைய வசூல் சாதனை படைத்துள்ளது. கிங் ஆஃப் கோதாவின் டிஜிட்டல், சாட்டிலைட் மற்றும் இசை உரிமைகள் சுமார் ரூ.40 கோடிக்கு விற்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும், சுமார் 5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாகவும் தெரிகிறது.
இதனால் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகள் சுமார் ரூ.35 கோடி வரை இருக்கும் என இண்டஸ்ட்ரியில் பேசப்படுகிறது.முந்தைய டிஜிட்டல் உரிமை சாதனையை மோகன்லாலின் த்ரிஷ்யம் 2 வைத்திருந்தது, இது பிரைம் வீடியோவுக்கு சுமார் 26 கோடிக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்பாடலில் நடிகை ரித்திகா சிங் கவர்ச்சியில் ஆட்டம் போட்டிருக்கிறார். ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா எப்படி கவர்ச்சியில் மின்னினாரோ அப்படியொரு கவர்ச்சியில் ரித்திகா சிங் குத்தாட்டம் போட்டிருக்கிறார்.