பிரபல நகைச்சுவை நடிகரான யோகிபாபு கோவில் ஒன்றில் அவமானப்பட்ட காணொளி வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் யோகிபாபு தற்போதும் படங்களில் பிஸியாக நடித்துவரும் இவர் சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ரஜினியுடன் இவர் நடித்த இந்த படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வரவுள்ளது. அதுமட்டுமில்லாமல் அட்லீ இயக்கிய ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நடிததுள்ள நிலையில், இப்படமும் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. தற்போது பல தயாரிப்பாளர்கள் யோகிபாபுவின் கால்ஷீட் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
சமீபத்தில் தோனி தயாரித்த முதல் படமான எல்.ஜி.எம் படத்திற்காக யோகிபாபுவிடம் தேதி வாங்குவதற்கு கஷ்டப்பட்டதாக கூறியிருந்தார். இவ்வாறு கடும் பரபரப்புக்கு மத்தியில் தனது மனநிம்மதிக்காக அவ்வப்போது கோவில் சென்று வருகின்றார். தற்போது சென்றுள்ள கோவிலில் தீண்டாமை கொடுமையை சந்தித்துள்ளார். முருகன் பக்தரான இவர், அண்மையில் சிறுவாபுரியில் உள்ள முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார்.
அப்போது அங்கு வந்திருந்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சுவாமி தரிசனம் முடிந்து அங்குள்ள அர்ச்சர் ஒருவரை பார்க்க சென்ற போது, அவருக்கு கை கொடுக்க கையை நீட்டியுள்ளார். ஆனால் அந்த அர்ச்சகரோ, யோகிபாபுவிற்கு கை கொடுக்க மறுத்துள்ளார். இக்காட்சியை தனது இன்ஸ்டாகிராமில் யோகி பாபு பதிவிட்டுள்ளார்.முன்னணி நகைச்சுவை நடிகருக்கே இப்படியொரு தீண்டாமை கொடுமையா? என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram