பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் இனியா CSK வீரரை காதலிப்பதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பாக்கியலட்சுமி சீரியல் பிரபல தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. ஆரம்பத்தில் இந்த சீரியல் சாதாரண நிலைமையில் தான் ஓடிக் கொண்டிருந்தது, கோபியின் இரண்டாவது திருமணத்தின் போது தான் மக்களிடையே டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இதன்படி, பாக்கியாவை விவாகரத்து செய்த கோபி ஒரு பெண் குழந்தையுடன் இருக்கும் ராதிகாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.இவர்களின் திருமணத்தை கோபியின் வீட்டிலுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளாத போது ராதிகா பொலிஸின் ஆதரவுடன் கோபியின் வீட்டில் இருந்து வருகிறார்கள். இனியா ராதிகாவுடன் அப்பா கோபி சேர்ந்து விடக் கூடாது என நினைத்து சில வேலைகளை பார்த்து வருகிறார். காதல் கிசுகிசுவிற்கு ஒரு முற்றுப்புள்ளி இந்த நிலையில் சீரியல் ஒரு பக்கம் விறுப்பாக ஓடிக் கொண்டிருந்தாலும் கோபியின் ஆசை மகளாக நடிக்கும் இனியா
அவரின் சமூக வலைத்தளப்பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அந்த வகையில் சமிபத்தில் மெகந்தியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு “ என்ன இனியா திருமணமா?” என ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். மேலும் CSK பந்துவீச்சாளர் பத்திரனா இருந்ததால் அவர்கள் இடையே காதல் இருப்பதாக கிசுகிசு பரவியது. இதற்கு சிரித்து கொண்டே..“ நேஹா மற்றும் பத்திரனா காதலிக்கிறார்கள் என பரவிய செய்தியை பார்த்து ஷாக் ஆன நேஹா, ‘சிரிக்கிறதா, அழுகிறதானு கூட தெரியல டா யப்பா” என பதிவிட்டுள்ளார். இந்த பதிலடியை விமர்சகர்கள் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.