2002 ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமான நடிகை தான் சதா இந்த படம் தெலுங்கில் மாஸ் ஹிட்டை கொடுத்தது. மேலும் அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து வெளியிட்டார்கள். இந்த படத்திலும் சதா தான் ஹீரோயினியாக அறிமுகம் ஆனார். போயா போ.. என்ற வசனத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் நடிகை சதா. தமிழிலும் மெகா ஹிட் வெற்றியை இந்த படம் பெற்று தந்தது. மிகவும் ஹோம்லியான முகத் தோற்றம், நல்ல நடிப்பு திறமை இருந்ததால் அடுத்தடுத்து இவருக்கு தமிழில் பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. குறிப்பாக இவருக்கு பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த அந்நியன் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்து சேர்ந்தது.
இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்ட நடிகை சதா ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்றார். மேலும் தமிழில் இவர் மாதவனுடன் பிரியசகி, அஜித்துடன் திருப்பதி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படு பிஸியாக மிக சிறந்த முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவருக்கு திடீரென பட வாய்ப்புகள் குறைந்தது.இதனை அடுத்து தமிழில் இவர் கடைசியாக டார்ச் லைட் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டியில் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.
அந்தப் பேட்டியில் அவர் கூறும் போது இயக்குனர் தேஜா இயக்கிய படத்தில் ஒரு மோசமான காட்சியில் நடித்ததை நினைத்து இன்றும் வருத்தப்படுவதாக கூறியிருக்கிறார். அப்படியா? என்ன அந்த காட்சியில் இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். அந்தக் காட்சியில் வில்லனாக நடித்த கோபி சந்த் நாக்கால் என் கன்னத்தை நக்குவது போல ஒரு காட்சி இருந்தது. இந்த காட்சி வேண்டவே வேண்டாம் என்று நடிகை சதா எவ்வளவு கெஞ்சியும் இயக்குனர் அந்த படத்தில் இந்த காட்சி வேண்டும் என்று உறுதியாக சொல்லி படம் ஆக்கிவிட்டார். எனவே இந்த சீன் சூட்டிங் முடித்து வீட்டுக்கு சென்று அதை நினைத்து மிகவும் நொந்து அழுததாக அவர் அந்த பேட்டியில் கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என கூறலாம்.