தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, சமீபகாலமாக மயோசிடிஸ் நோயில் இருந்து விடுபட பல சிகிச்சைகளை செய்து வருகிறார்.இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவர் நடிகை சமந்தா. பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் தற்போது இந்தோனேசியாவில் உள்ள பாலிக்கு ட்ரிப் சென்றுள்ளார். அதனை தொடர்ந்து காத்து வாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.தொடர்ந்து படங்களில் நடித்துவரும் சமந்தாவிற்கு இடையில் மையோ சிட்டிஸ் என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக இவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
இருப்பினும் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.சமந்தா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான யசோதா திரைப்படம் ரசிகர்களிடையே அந்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. அதனை தொடர்ந்து மீண்டும் அவர் நடிப்பில் சாகுந்தலம் என்ற திரைப்படம் வெளியானது.இந்த திரைப்படமும் இவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் படுதோல்வியை தழுவியது.இது சமந்தாவிற்கு மிகப்பெரிய மன வருத்தத்தை அளித்திருந்தது.
இதைத்தொடர்ந்து தற்போது விஜய் தேவர் கொண்டா நடிப்பில் உருவாகி வரும் குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார். குஷி, சிடடெல் படத்தின் ஷூட்டிங் முடிந்த பின் தீவிர சிகிச்சை பெற்று சில காலம் ஓய்வில் இருக்கப்போவதாகவும் முடிவெடுத்திருக்கிறார் சமந்தா. இந்நிலையில் தன் தோழியுடன் இந்தோனேசியாவுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டும் உடற்பயிற்சி செய்தும் வருகிறார். தற்போது தங்கியிருக்கும் ஒரு பகுதியில் குரங்கினை கையில் ஏந்தியபடி சேட்டை செய்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் சமந்தா. இதனை பார்த்த ரசிகர்கள் கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.