தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தை பிடித்துள்ளவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மாமன்னன் படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்தனர்.வாரிசு நடிகையாக சினிமாவிற்குள் வந்த கீர்த்தி சுரேஷ் தமிழில் விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் கதையின் நாயகியாகவும் நடித்து அசத்தி வருகிறார். அதிலும் இவர் நடித்த மகாநடி திரைப்படம் இவருக்கு பெரும் புகழை தேடி தந்தது.பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறாக வெளிவந்த அப்படத்தில் கீர்த்தியின் நடிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு இருந்தது.
அதை தொடர்ந்து அவருக்கான வாய்ப்புகளும் குவிய ஆரம்பித்தது. அந்த வகையில் மலையாளம், தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் அவர் கவனம் செலுத்தி வந்தார்.தற்போது கூட அவர் தமிழில் மாமன்னன் உட்பட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதேபோன்று தெலுங்கிலும் இவருக்கான மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இங்கு குடும்ப குத்துவிளக்காக இருக்கும் அம்மணி அங்கு கண்டமேனிக்கு கவர்ச்சி காட்டுவது தான்.சமீப காலமாகவே இவர் மேல் இது குறித்த சர்ச்சைகள் எழுந்து வருகிறது.
அதிலும் ஓவர் கிளாமரில் இவர் நடத்தும் போட்டோ ஷூட்டுகள் சில விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருகிறது. கீர்த்தி சுரேஷ் இலை மறை காயாக காட்டி வந்த கவர்ச்சியை இப்போது வெளிப்படையாகவே காட்ட ஆரம்பித்துள்ளார்.அந்த வகையில் இப்போது அவருடைய சோசியல் மீடியா பக்கத்தை திறந்தாலே கவர்ச்சி போட்டோக்கள் தான் ஆக்கிரமித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் இவர் நடித்த ஒரு படத்தில் கூட மோசமான கவர்ச்சியை காட்டி இருந்தார். இதை பார்த்த பலரும் இப்படியே இவர் நடித்து கொண்டிருந்தால் இருக்கும் கொஞ்ச நஞ்ச வாய்ப்பும் பிச்சிக்கிட்டு
போயிடும் என்று வெளிப்படையாகவே கிண்டல் செய்து வருகின்றனர். இதையடுத்து இவர் கண்ணிவெடி என்ற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் ராஜ் இயக்கவுள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ்க் விஜய் நடித்து வெற்றி பெற்ற தெறி படத்தின் இந்தி ரீமேக் படத்திலும் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். தற்போது தாய்லாந்து சுற்றுலா சென்றுள்ள கீர்த்தி சுரேஷ் அங்கு எடுத்த வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் ஷார்ட்ஸ் உடையில் படு கிளாமராக உலா வருகிறார்.
View this post on Instagram