விமான நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டதால் நடிகர் ரஜினிகாந்தை போலீசார் 1979 ஆம் ஆண்டு கைது செய்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விமான நிலையத்தில் ரகளை
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவரும் சூப்பர் ஸ்டாருமானவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் 1979 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் பட ஷுட்டிங்கிற்காக ஹைதராபாத் சென்றுள்ளார். ஷுட்டிங் முடித்தவுடன் விமான நிலையத்திற்கு குடிபோதையில் சென்று இருக்கிறார். அப்போது அவர் நண்பரிடம் தகாத வார்த்தையால் பேசியதால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.இதனிடையே விமான நிலைய அதிகாரிகள் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றுள்ளனர்.
ஆனால் ரஜினியை கட்டுப்படுத்த முடியாததால் கண்ணாடி அறையில் இருக்க வைத்துள்ளனர். ரஜினி கண்ணாடியை உடைத்து விட்டு அட்டகாசம் செய்தாராம். கடைசியில் ஹைதராபாத் போலீசார் அவரை கைது செய்தனர். பல ஆண்டுகளுக்கு ,மும்பு நடந்த இந்த சம்பவத்தை ரசிகர்கள் சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.