ஒரு காலத்தில் இளசுகளின் கனவு கன்னியாக ரவுண்டு கட்டி வந்த நடிகை தான் மனிஷா கொய்ராலா, நேபாளத்தை சேர்ந்த ராஜ குடும்பத்துப் பெண்ணான இவர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் பம்பாய், கமல்ஹாசனின் இந்தியன், அர்ஜுனின் முதல்வன், ரஜினியின் பாபா உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். மனிஷா கொய்ராலா 2010-ஆம் ஆண்டு சாம்ராட் தேகல் என்பவரை மணந்து இரண்டு வருடத்தில் விவாகரத்து செய்தார்.
பின்னர் புற்றுநோய் பாதிப்பில் சிக்கி வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டார். இந்நிலையில் தனக்கு இருந்த மதுப்பழக்கம் குறித்து மனிஷா கொய்ராலா பேசியுள்ளார். அவர் “நான் விவாகரத்து பெற்றதும் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொண்டேன். மதுப்பழக்கத்துக்கு அடிமையானேன். அதன் பிறகு வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது.
மதுப்பழக்கம் காரணமாக எனது மதிப்பு மிக்க வாழ்க்கையை இழந்தேன். மது அருந்துவது பிரச்சினைக்கு தீர்வு ஆகாது. மது எந்த பிரச்சினையில் இருந்தும் நம்மை வெளியேற்றாது. மேலும் பிரச்சினைகளில் மூழ்கடிக்கவே செய்யும். இதனை புரிந்து கொண்டு நடக்க வேண்டும்” என்று பேசினார்.தற்போது 52 வயதாகும் இவர் இப்படி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.