கல்யாணம் ஆகாமலேயே அம்மாவாக நினைக்கும் அனுஷ்கா…! பரவும் விமர்னத்தை பார்த்து பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள் …!

அனுஷ்கா நடிப்பில் வெளியாகியிருக்கும் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி கதைகளம் ரசிகர்களை ஈர்த்துள்ளது. நடிகை அனுஷ்கா நடிகை அனுஷ்கா தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்து கொண்டிருந்த சமயத்தில் இஞ்சு இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை அதிகமாக்கினார். அதன்பின் பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லை.அப்படி இருந்தும் கூட அனுஷ்காவுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம் கூட குறையவே இல்லை.மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி’ படத்தில் நவீன் பாலிஷெட்டி ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும், அனுஷ்கா ஷெட்டி பிரபல சமையல் கலைஞராகவும் நடித்துள்ளனர். இந்த படத்தை யுவி கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர். மேலும் 41 வயதாகியும் அனுஷ்கா இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.

முதற்கட்டமாக ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி’ படத்தை ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியிடத் தயாராகி வந்தனர். ஆனால் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தாமதமானதால் தள்ளிப்போவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பின்னர் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி’ ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகலாம் என்று செய்திகள் வெளியாகின.  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது. அனுஷ்கா திரையரங்குகளுக்கு வந்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. 2018 ஆம் ஆண்டு வெளியானது ‘பாக்மதி’. அதன் பிறகு அவர் நடித்த ‘நிசப்தம்’ அமேசான் பிரைம் தளத்தில் இடையில் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் சிறிய கெஸ்ட் ரோலில் தோன்றினார்.

இதனால் அனுஷ்காவின் படத்திற்காக ரசிகர்கள் பல நாட்களாக காத்திருக்கின்றனர். மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி தற்போது தெலுங்கில் “மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்து வெளியாகியுள்ளது. அதில், தனிமையில் ஒருவர் எவ்வாறு வேதனையை அனுபவிக்கிறார் என்பதை அனுஷ்கா எதார்த்தமாக காட்டி இருக்கிறார்.மேலும் ஆண்கள் மீது உள்ள வெறுப்பின் காரணமாக கல்யாணம் ஆகாமலேயே குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவுக்கு அனுஷ்கா வந்திருப்பதாக கதை நகர்கிறது. நீண்ட நாட்களுக்கு பின் திரையில் அனுஷ்காவை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *