கர்ப்பம் குறித்த கேள்விக்கு நடிகை சமந்தா கேலியாக பதிலளித்துள்ளார். நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு என கலக்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே இருப்பார். சமீபமாக புகைப்படங்கள் வெளியிடாமலும், இணையத்தில் இருந்து ஒதுங்கி இருந்தார்.இதற்கு அவர் உடல்நிலை காரணமாக கூறப்பட்டது. இதற்கிடையில், நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அடுத்த சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டார்.
தற்போது, தனது நடிப்பில் கவனம் செலுத்தில் திரையுலகில் கொடி கட்டி பறந்து வருகிறார். இந்நிலையில், இணைய பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.இதனை தொடர்ந்து அந்த ஆண்டு மிகவும் கடினமான ஆண்டாகவே சமந்தாவிற்கு அமைந்தது. ஜிம் ஒர்கவுட்டில் மரண மாஸ் காட்ட தொடங்கிய சமந்தா மயோசிட்டிஸ் என்ற தசை நோயால் பாதிக்கப்பட்டார். சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளால் அவர் மனதளவிலும் சோர்ந்திருந்தார். இதனால் விஜய் தேவர்கொண்டா உடன் சமந்தா நடித்து வந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
சிகிச்சைகளுக்கு பிறகு கம் பேக் கொடுத்த சமந்தா படப்பிடிப்பை தொடங்கினார். வருண் தவானுடன் சிட்டாடெல் வெப் சீரீஸிலும் நடித்து முடித்தார். அப்போது, நீங்கள் கர்ப்பமாக இருந்திருக்கிறீர்களா..? என்று ஒரு ரசிகர் கேள்வி எழுப்பினார்.அதற்கு ஆம், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் கர்ப்பமாக இருக்கிறேன். இன்னும் குழந்தை பிறக்கவில்லை என கேலியாக சமந்தா பதிலளித்துள்ளார். முன்னதாக அவர் கர்ப்பமாக இருப்பதாக பல செய்திகள் பரவி வந்த நிலையில் அவர் இவ்வாறு பதிலளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.