கர்ப்பமாக இருக்கும் மனைவியை தனிமையில் விட்டு சென்ற நடிகர்- பிக்பாஸ் செல்கிறாரா…?

செல்லம்மா சீரியல் அர்ணவ் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக நுழையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் 8 பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனதை வென்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக்பாஸ்.இந்த நிகழ்ச்சி தமிழில் இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடந்த சீசன்களை இதுவரையில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

இப்படியொரு நிலையில் திடீரென நிறைய படங்களில் கமல் கமிட்டாகி இருப்பதால் ஷோவில் இருந்து திடீரென விலகியுள்ளார். இதனை அறிக்கை மூலம் அறிவித்தார்.இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி களமிறங்கியுள்ளார்.இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் போட்டியாளர்களாக செல்லப் போகும் பிரபலங்களின் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அந்த வகையில், “செல்லம்மா ” சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த அர்னாவ்,பிக் பாஸ் போட்டியாளராக நுழைய இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இவர் சமீபக் காலத்திற்கு முன்னர் திவ்யா ஸ்ரீ என்ற சீரியல் நடிகையை கர்ப்பமாக்கி அவரை கைவிட்டார். பின்னர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *