தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றிருப்பவர் நடிகை மீனா. ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.தொடர்ந்து கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் 40 ஆண்டுகள் ஆனதை அண்மையில் விழாவாக கொண்டாடினர். மீனாவின் கணவர் நுரையீரல் தோற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். கணவர் மரணத்திற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்ற கனவோடு இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய மீனா அவ்வை சண்முகி படத்தில் கமலுடன் நடித்தது குறித்து பேசினார். கமலுடன் முதன் முதலாக மீனா அவ்வைசண்முகி என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு ,கொடுத்தனர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மீனா அவ்வைசண்முகி படத்தின் ஷூட்டிங்கில் நடந்த சம்பவத்தை குறித்து பேசியுள்ளார். கமல் படம் என்றாலே முத்த காட்சிகள் இருக்கும் ஆனால் அந்த சமயத்தில் அதை பற்றி யோசிக்காமல் படத்திற்கு ஓகே சொல்லிவிட்டேன்.
அப்போது ஒரு நாள் கே எஸ் ரவிக்குமார், அடுத்து கமலுடன் முத்த காட்சி எடுக்க போவதாக என்னிடம் சொன்னார். இதை கேட்ட உடனே எனக்கு பயம் வந்துவிட்டது. அந்த சமயத்தில் கேரவன் சென்று அம்மாவிடம் இது போன்ற காட்சியில் நடிக்க பிடிக்கவில்லை என்று சொல்லி கண்கலங்கினேன். அதுக்கு அப்புறம் இந்த காட்சி எடுக்கும் போது கமல் ஹாசன் முத்தம் கொடுப்பது போல் பக்கம் வந்து ‘இந்த தடவை வேண்டாமே” என்று சொல்லி முத்தம் கொடுக்காமல் சென்றுவிட்டார். அப்போது நான் சந்தோஷத்தில் துள்ளி குதித்தேன் என்று மீனா கூறியுள்ளார்.