தீபிகா படுகோன் ஒரு நடிகை இரண்டு வருடங்களே தாக்குப் பிடிக்க முடியாமல் சினிமா துறையை விட்டு வெளியேறும் இந்த நேரத்தில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் சினிமாவில் தனக்கென்று ஒரு அசைக்க முடியாத இடத்தை பிடித்தவர் தான் தீபிகா படுகோன். எத்தனையோ நடிகைகள் பாலிவுட்டிற்கு படையெடுத்து வந்தாலும் தனக்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் தீபிகா.பாலிவுடையே ஒரு கலக்கு கலக்கிய நடிகை பாலிவுட்டின் முன்னணி கதாநாயகரான ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2018 ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி தீபிகா ரன்வீர் திருமணம் மிக சிறப்பாக நடைபெற்றது. கிட்டத்திட்ட 77 கோடி செலவில் திருமணம் நடந்ததாக தகவல்கள் வெளிவந்தது.திருமணத்தின் போது தீபிகா அணிந்த லெகங்கா மட்டுமே 12 லட்சம் இத்தாலி நாட்டில் உள்ள பிரம்மாண்ட ரிசார்ட் ஒன்றில் இவர்களது திருமணம் நடந்துள்ளது.
அந்த ரிசார்ட்டில் ஒரு நாள் ஒரு அறைக்கு வாடகை மட்டும் 33,000 ரூபாயாம்.திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் கிளாமருக்கு கேப் விட்டு தீபிகா ஷாருக்கானின் பதான் படத்தில் பிகினி உடையில் தாராளம் காட்டி நடித்திருந்தார். திருமணத்திற்கு முன் கூட இப்படி நடிக்கவில்லை திருமணத்திற்கு பின் இப்படி போல்டாக தீபிகா நடிக்கிறாரே என்ற பேச்சு பாலிவுட்டில் இருந்தது. சமீபத்தில் தான் கொடுத்த வெற்றியில் இருக்கும் தீபிகா படுகோன் அடுத்தடுத்து தனக்கு வரும் பட வாய்ப்புகளில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் இன்ஸ்டாவில் பிகினி உடையில் இருக்கும் படி ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
அதில் கருப்பு வெள்ளை பிகினி அணிந்து கொஞ்சம் கவர்ச்சியாகவே இருந்தார் தீபிகா. அந்த புகைப்படம் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே 8 லட்சத்திற்கு அதிகமானோர் லைக் அள்ளி குவித்தனர்.புகைப்படத்தை பதிவிடுவதைப் பற்றி தனது கணவர் ரன்வீர் கூட தெரியப்படுத்தவில்லை தீபிகா திடீரென்று அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட அவருடைய கணவர் அதை பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்ததுடன் தீபிகா புகைப்படத்தை வெளியிடும் முன் எச்சரிக்கை செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ஜாலியாக கருத்தும் தெரிவித்துள்ளார்.